பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/285

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

262 வாழையடி வாழை

“மீண்டும் இளமையளித்தல்’, ‘வாழ்நாளை அதிகரித்தல்” என்பதுபற்றிப் பல கம்பிக்கைகள் எழுந்துள்ளன. சிலர் ஹார்மோன் களினால் இளமையைத் திரும்பப்பெறமுடியும் என்று நம்புகின்றனர். பால்சுரப்பிகளின் சாரத்தைக் குததிப்புகுத்துதல், வானரச்-சுரப்பி அறுவைமுறைகள், பால்சுரப்பித துப்புகளை” வெட்டி ஒட்ட வைத்தல்-ஆகியவை யாவும் இன்று பொய்யாய்ப் பழங்கதையாய் மெல்லமெல்லப் போய்விட்டன. அண்மையில் “ஆண்"ஹார் மோன (டெஸ்டாஸ்டேரோன்) மூலம் இளமையளித்தல் சிகிசசை கடைமுறை வந்துள்ளது. ஆனால் முடிவுகள் கேள்விக்கிடமாகவே உள்ளன. ஆக்ஸ்ஃபோர்டு மருத்துவர் ஒருவர் அதன் விபத்தினைப் பற்றி எச்சரிததுள்ளார். அவர் முதுமையினால் ஏற்படும் தளர்ச்சியை எந்தத் தூண்டுதலாலும் நீககமுடியாது எனறும், தளர்ந்து சளைத்துள்ள கிழக் குதிரையை அதிகவேலை செய்யத் துண்டினால் அது மரித்தல் போலவே கிழத்தனமை எய்திய உடலில் குத்திப் புகுத்தப்பெறும் ஹார்மோன்கள் கிழஉடலுக்கு இளமை அளிப்பதைவிட அஃது இறப்பதில் கொண்டு செலுததுவதற்குத் தூண்டக்கூடியதாக உள்ளன.

1946இல் ஓர் இரஷ்ய அறிவியலறிஞர் போகோலோமெட்ஸ் சீரம்’ என்ற ஒரு சாரத்தைக் கண்டறிந்தார். அதைச் சிலர் “அணுவாற்றலைவிடச் சிறந்தது’ என்று போற்றிப் புகழ்ந்தனர். அலெக்ஸாண்டர் எ. பேகோலோமெட்ஸ் என்ற அந்த அறிஞர் கமது உடல் சீர்கேடு அடைவதும் நோய்வாய்ப்படுவதும்’ இணைப்பு’ இழையங்களில்தான் நடைபெறுகின்றன எனறும், தம்முடைய சீரம் அத்தகைய இழையங்களை வலுப்படுத்துகின்றன என்றும் தமது கொள்கையை விளக்கினார், அன்றியும், அவர் தமது சீரம் காயங்களை ஆற்றியும், புற்றுநோய் அணுக்களைக கரைத் தும், எலும்புகளிலுள்ள பழுதுகளைச் சரிசெய்தும் செயற் படுகின்றது என்றும், தக்க உணவும் சுகாதாரமும் தரப் பெற்றால் மனிதரின் இயல்பான வாழ்நாளை 120லிருந்து 150 வரை நீட்டிக்கலாம் என்றும் கூறினார். 1947இல் அவர் இறந்து

9. girthLisir - Ducts. 10. Bogolometz serum.