பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/289

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

266 வாழையடி வாழை

வளைவுகள், கை விரல்களின் வடிவம் முதலியவை. இந்த இணைப்பு ஜீன்கள். சில குறிபபிட்ட நோய்கள் அல்லது குறைகளை விளைவிக் கின்றனவா ? அல்லது சில குறிப்பிட்ட வகை நடத்தைக்கு அவை காரணமாகின்றனவா ? என்பவைபற்றிய சில முக்கியமான உட் குறிப்புகளை (Cues) கல்குகின்றன.

மேற்குறிப்பிட்ட குறிப்புகளை மனத்தில் கொண்டு நம் எதிர் கால வாழ்க்கையினை அறுதியிட்டுக்கொள்ள வேண்டும். நாம் திருமணம் புரிந்து கொள்ளல், நம் குழந்தைகட்கு மணம் புரிவிததல் போன்ற செயல்களில் மிக்க கவனம் ேவ ண் டு ம். மணப் பெண்ணையோ மணமகனையோ தேர்ந்தெடுப்பதில் அவரவர் குடும்ப மரபு வழிகளை இயன்றவரை ஆராய வேண்டும் நம்முடைய குடும்ப மரபு வழிகளையும் தெரிந்துகொள்ள முயல வேண்டும். மரபு வழியாக இறங்கும் பண்புகளையும் பிறவற்றையும் அறிந்த நாம் ‘எல்லாம் தலைவிதிப்படி நடக்கும்’ எனறு வாளா இருததல் கூடாது. பணததையோ, சமூகததில் வகிக்கும் நிலையையோ, வரதட்சினையையோ பணயமாக வைத்துத் திருமணததில் இறங்கு வது அறிவியலை அறிந்தவர்களின் அறிவுடைமைச் செயலன்று . எண்ணித் துணியும் செயலுமன்று. தனிப்படட நாமே நம்முடைய தலைவிதியின் தலைவன்’ என்றோ நம்முடைய ஆன்மாவின் ‘தளகர்த்தன்’ என்றோ கருதுதல் பெருந்தவறு.

நாம்தான் ஏதோ ஒருவகையில் பெரும்பாலும் தற்செயலால் அறுதியிடப்பெற்றவர்கள் என்ற போதிலும், நம்முடைய வருங் காலச் சந்ததியினரைத் தற்செயலுக்கு விட்டு வைத்தலாகாது. நாம் ஏதோ ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, தற்கால மனித இனம் (Homo stapiens) தோன்றிய காலத்திலிருந்து மதிமயங்கிக் கிடந்து விட்டோம். கண்மூடித்தனமாக எத்தனையோ மூடப் பழக்கங்கட்கு அடிமையாக இருந்துவிட்டோம். நமக்குச் சரியான அறிவியல் அறிவு கைவரப் பெறாததால் கால இடச் சூழ்நிலைகளின் அலை களால் அங்குமிங்கமாகத் தள்ளப்பெற்றோம். இப்போது கால்வழி இயல்பற்றிய அறிவு வாய்க்கப்பெற்ற பிறகு அறிவொளி வீசத் தொடங்கியுள்ளது. இந்த ஒளியில் நாம் எதனால் இப்படியுள் ளோம்? நாம் ஏன் இபபடியானோம்? இவ்வுலகை இன்னும் மேம்