பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல் 2

உயிரணு

இந்த உலகிலுள்ள உயிரிகளெல்லாம் புரோடோபிளாசம்’ என்னும் ஒருவகை உயிர்ப் பொருளால் ஆனவை. பெரும்பாலும் இந்தப் பொருளுக்கு நிறம் இல்லை. கூழ் போன்ற இந்தப் பொருளே உயிருக்கு அடிப்படையாகும். இஃது உயிரிகளில் சிறுசிறு துணுக்கு களாக அமைந்திருக்கும். இந்தத் துணுக்குகளை உயிரணுக்கள்” என்று வழங்குவர். உயிரணுக்களைக் கண்ணால் காண முடியாது. அவை நுண்பெருக்கிக்"குத்தான் புலனாகும். களிமண்ணாலான செங்கல்களைத் கொண்டு ஒரு கட்டடம் அமைக்கப்பெற்றிருப்பதைப் போல் உயிர்ப் பொருளாலான உயிரணுக்களைக் கொண் டு உயிரிகள் அமைக்கப்பெற்றுள்ளன என்று சொல்லி வைக்கலாம். மனிதனும் ஓர் உயிரியாதலின் அவனும் இந்த உயிரணுக்களால்தான் ஆக்கப்பெற்றுள்ளான்.

இனி, உயிரணுக்களின் சிறப்பியல்புகளை நோக்குவோம். உயிரணுவின் அமைப்பினைப் படத்தில் காண்க. (படம்-1). படத்தை உற்று நோக்கினால் அதில் உயிரணுச் சவ்வு,* உட்கருச் சுற்றுப் பசை, உட்கரு, உட்கருச் சவ்வு, சென்ட்ரோஸோம்”

go_u?ifi'j@LIT ([56ir - Protoplasm. *_uosgol - Cell. poisorl (Bj - Microscope. a u%lsgopl &sissil - Cell membrane. உட்கருச் சுற்றுப்பசை - Cytoplasam. go-Lo.45(5 - Nucleus; go tolds(j4 &616) - Nuclear membrane சென்ட்ரோஸோம் - Centrosome.

i