பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/291

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல் 33

கால்வழி இயலில் புரட்சி

இரண்டாம் உலகப் பெரும்போர் அணுயுகததின திரிவிக்கிரமா வதாரத்தைக் காட்டியது. இஃது இயற்பியலில் நாம் கண்ட விந்தை. வாமனாவதாரம் போல் அடங்கிக் கிடந்த டால்ட்டனின் அணுக கொள்கை மெக்ஸிகோ பாலைவனத்தில் அணுகுண்டு ஒத்திகை கடந்த அன்று (1945 ஆண்டு சூலைத் திங்கள் 16 ஆம் நாள்) திரிவிக்கிரமாவதாரம் போல் கிளர்ந்தெழுந்தது. அணுக் கொள்கை யின் பல உண்மைகளை மறைபோல் வைத்திருந்த அறிவியல் உலகம் அன்று வெட்ட வெளிச்சமாக்கிற்று. இபபோது நாம் அணு யுகத்தில் வாழகின்றோம்என்ற நினைவு எல்லோரிடமும் உள்ளது. தீபாவளி அன்று வெடிக்கும் பல்வேறு வெடிகளில் ஒன்று அணு குண்டு என்று திருநாமம் பெற்று விளங்குவதால் பள்ளிச் சிறுவர் களும் அணுவைபபற்றி அறிந்தவர்கள்போல் ஆகின்றனர். இன்று அணு ஆற்றல் புரியக்கூடிய நன்மைகள் தீமையைவிடப் பலப்பலவாக விரிந்துவிட்டன. தாவர இயல், பயிரியல், மருத்துவ இயல், தொழிலியல், போக்குவரத்து இயல் போன்ற இயல்களில் பங்கு பெறும் அணுவாற்றலைப் பன்னி உரைக்கில் பாரதமாகும். இவை யெல்லாம் இயற்பியல் வளர்ந்த வரலாற்றில் விரித்தெழுதப் பெற வேண்டிய புதிர்களாகும்.

ஊனக் கண்ணுக்குப் புலனாகாத அணு புரியும் அற்புதத் திருவிளையாடல்களைப் போலவே, உயிரியலிலும் (Biology)

1. சுப்பு ரெட்டியார், ந அணுவின் ஆக்கம் (எஸ். ஆர். சுப்பிர மணிய பிள்ளை, 6, பிலிப்ஸ் தெரு, சென்னை-600 001.-1958) என்ற நூலில் விரிவாகக் காணலாம்.