பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/293

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

270 வாழையடி வாழை

குதிக்கும் ஜீனை ஒரு சோதனைக்குழலில் செயற்கை முறையில் தயாரித்தவர். இந்த ஜீன் புற்றுநோய் விளைவிககும் ஜீன்களைப் பற்றிய தெளிவான உண்மை காண்பதில் கொண்டு செலுததும் என்று விளக்கினார். இவர் மானிட ஜீன் ஒன்றையும் செயற்கை முறையில் தயாரித்தவர். இது இன்சுலின் சாரத்தை விளைவிக்க உதவுவது. தாம் ஒட்டாவாவில் செய்துமுடித்த இன்சுலின் ஆய்வுப் பணியை இந்தியாவில் செய்திருந்தால் அமெரிக்காவில் தாம் எடுத்துக்கொண்ட காலத்தில் பாதியில் முடித்திருக்கலாம் என்றும் குறிப்பிட்டார். ஆனால் இது தமக்குச் சுதந்திரம் அளித்துத் தம் பணியில் அதிகார வர்க்கம் குறுக்கிடாதிருந்தால்தான் இது சாத்திய மாகும் என்றும் அப்பொழுதுதான் ‘தாம் காணும் அறிவியல் கனவை’ நனவாக்க முடியும் என்றும் விளக்கினார். இங்கு ஆய்வுப் பணிக்குரிய நிலைமைகள் சரியாக இல்லாமையால்தான சுமார் இருபததைந்து ஆண்டுகட்கு முன்னர்த் தாம் இந்தியாவைவிட்டு அமெரிக்காவிற்குப் போக நேரிட்டது என்றும் குறிபபிட்டார்.

இருவித மூட்டைப்பூச்சிகள் : இன்னோர் இந்திய கால்வழி இயல் ஆராய்சசி அறிஞர் ஆனந்தமோகன் சக்கரவர்த்தி என்ற இளைஞர். கல்கத்தாவில் பல்கலைககழகத்தில் பயின்று உயிரியல்வேதியியலில் எம்.எஸ்.சி. பட்டமும் (1960), பேராசிரியர் சைலேஷ் சாய் அவர்களின் கீழ் ஆய்ந்து உயிரியல் - வேதியியலின் ஒரு asso (Pseudomonus biochemistry) LirLi Lill-Qpid (1965) பெற்றார். இல்லினாயிஸ் பல்கலைக்கழகத்தில் டாக்டர் மேல் பட்டத்திற்குமேல் ஆய்வதற்கு உதவிப்பொருள் ஏற்பாடு (Fellow. ship) பெற்று ஆய்ந்தார். பின்னர் அங்கு மின்பொருள் வணிக கிறுவனம் ஒனறில அறிவியல் வல்லுநராகப் பணியாற்றி (1971-79). தற்சமயம் சிக்காகோவிலுள்ள இல்லினாய்ஸ் பல்கலைக் கழகத்தில் உயிரியல் - வேதியியல் பேராசிரியராகப் பணியாற்றி வருகின்றார். இங்கு இவர்க்குத தம் பணியில் முழுசுதந்திரம் உண்டு.

தம்முடைய ஆய்வின்மூலம் இவர் கண்டறிந்தவை இருவித முட்டைப் பூச்சிகள் (Super bugs). இவை உயிரியல் - பொறியியல் வழியாகப் படைத்த நுண்மங்கள் (Bacteria) ஆகும். இவை தம்மால்