பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/294

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கால்வழி இயலில் புரட்சி 27

படைக்கப்பெற்ற ஒரு புதிய உயிர்வகை அன்றென்றும், இவை ஏற்கெனவே இருக்கும் நுண்மங்களின சிறிது மாற்றமடைந்த உயிர் வகை என்றும், தமது தேவைக்காக இவ்வாறு மாற்றப்பெற்ற தென்றும் இவர் கூறுகின்றார். இதைத்தான் உயிரியல் - பொறி யியல் (Genetic engineerine) எனகின்றார் இவர். இவருக்குத் தேவையான நிதியை அரசிடமிருந்தும் தனியார் நிறுவனங்களி லிருந்தும் பெறுவதாகச் சொல்லுகின்றார். இக் கண்டுபிடிப்பு பற்றிய வழக்கு ஒன்றும் பிறந்தது; உயிருள்ள பொருளைக் கண் டறிவதுபற்றிக் கருத்து மாறுபாடு இருந்தது. இவர் மேல்நிலை நீதிமன்றம் சென்று இவ்வாறு கண்டறிவது தம் உரிமை என்று வாதாடித் தனி உரிமைப் பத்திரத்தையும் (Patent) பெற்றார். இத னால் இவர் புகழ் எங்கும் பரவியது.

இந்த இரண்டுவகை மூட்டைப் பூச்சிகளும் எண்ணெய் உற்பத்திச் சாலையில் பெரிய அளவில் பயன்படுகின்றன. இந்த இருவகையுள் ஒருவகை ஒரு புதிய பொருளை உண்டாக்குகின்றது. இப் புதிய பொருள் திடநிலையிலுள்ள பண்படா (Crude) எண்ணெயைக் குழம்புகிலைக்கு மாற்றித் திரவநிலைக்குக் கொணர்கின்றன. சில கைவிடப்பெற்ற எண்ணெய்க் கிணறுகளிலுள்ள எண்ணெய் பம்பு வழியாக அனுப்பமுடியாத தடித்த நிலையில் உள்ளது. இதை இம் மூட்டைப் பூசசிகளைக் கொண்டு திரவநிலையாக்கப்பெறுகின்றது. இரண்டாவது வகை மூட்டைப் பூச்சிகள் இந்த எண்ணெய் குழாயின் உட்புறச் சுவர்களில் ஒட்டிக்கொள்வதைத் தடுத்து எண்ணெயின் பாகு நிலையைக் (Viscosity) குறைத்து ஓட்டத்தை மிகுவிககின்றது.

மலட்டுப்பெண் செயற்கை முறையில் கருத்தரிப்பு : மலடி வயிற் றில் ஒரு மகன் போலே, புதையல் எடுத்த ஒரு தனம் போலே” என் பது ஒரு திருப்புகழின் அடிகள். புதையலில் தனம் கிடைத்தல்’ நடைபெறக்கூடியது. சிலருக்குக் கிடைத்ததாகவும் செய்தி உள்ளது. ஆனால் மலடிக்கு மகன் பிறத்தல் என்பது சொல்லளவில்தான் இருந்து வந்தது. இன்றைய அறிவியல் இதனையும் மெய்ப்பித்து விடடது. அமெரிக்காவில் கலிபோர்னியா மாநிலத்தைச் சார்ந்த இரு பெண்கள் மலடிகள் என்று மெய்ப்பிக்கப்பெற்றவர்கள். அதா வது இவர்கள் சூற்பைகளில் முட்டையணுக்கள் உண்டாவதில்லை.