பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/296

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கால்வழி இயலில் புரட்சி 273

மாநாட்டின் முக்கியத்துவம்: அனுபற்றிய அறிவியல் அணு வியல் (Atomics) என்பது போல ஜீன்’ பற்றிய அறிவியல் கால் வழியியல் (Genctics) ஆகும். ஜீன்கள் குடிவழியை (Heredity) அறுதியிடும் கட்டடக் கற்கள். இத் துறை ஜீன்களின் இயல்புகள், அவை விளைவிக்கும் அற்புதப் பயன்கள் இவற்றை விளக்குவதால் கால்வழியியல் இன்று அறிவியலின் நடுநாயகமாகத் திகழ்கின்றது. இத் துறையின் அறிவு ஜீன்கள்பற்றிய அடிப்படை அறிவு, ஜீன் களை நடைமுறையில் பல்வேறு துறைகளில் கையாளும் துறை யணுக்கள், இவை பயன்படும் பல்வேறு துறைகள், இவை பயன்படு வதற்கேற்ற வாய்ப்புகள், இவை அறிவியலறிஞர்கட்கும் சமூகத்திற் கும் விடுக்கும் அறிவியல் சவால்கள், ஒழுக்கப் பிரச்சினைகள் ஆகியவைபற்றிய முன்னேற்றம் அசுர வேகத்தில் நடைபெற்று வருகின்றது. -

இந்த மாநாடு இந்திய அறிவியலறிஞர்கள் பயிர்களின் மேம் பாட்டு நிகழ்ச்சிகள், தாவர இழையங்களைப் பண்படுத்தல், சைட்டோ ஜெனிட்டிக்ஸ் (Cyto genetics) ஆகிய துறைகளில் மேற்கொண்ட முயற்சிகளின் பயனைத் திறங் தெரிந்து மதிப்பிடத் துணை செய்கின் றது. மற்றும் முன்னேற்றமடைந்த நாடுகளில் கால்வழியியல் பொறியியல் அடிப்படை அணுத்திரளைக் கால்வழியியல் (Basic molecular genetics) இவற்றில் கண்ட புரட்சிகரமான முன் னேற்றங்களை அறிந்துகொள்ளும் சாளரமாகவும் அமைகின்றது, அறிவியல் துறையில் நோபெல் பரிசுபெற்ற விற்பன்னர்கள் உலகில் மிகமிக முன்னேற்றமுடைய ஆய்வகங்களில் உயிரியல் துறை நுணுக்கங்களைப்பற்றி ஆராயும் ஆய்வாளர்கள் இவர்கள் ஒன்று கூடுதல் என்பது மூன்றாவது உலக அறிவியல் அறிஞர்களுக்கு உண்மையான அறிவியல் அறிவுக் கருவூலம்; அரிதாகக் கிடைக்கக் கூடிய வாய்ப்பு தருவதுமாகும். பெரும் புகழ்பெற்ற இந்திய அறிவியல் அறிஞரான டாக்டர் எம். எஸ். சுவாமிநாதன் அவர்களும் தம்முடைய தலைமையுரையில் தாவர விலங்கியல் ஜீன்களைக் காப்பதுபற்றிய இன்றியமையாமையைக் குறிப்பிட்டது மிகவும் பொருத்தமாகும். இன்னொரு முக்கியமான சிறப்பு இந்த மாநாட் டில் தாய்நாட்டிலிருந்து சென்று வெளி நாடுகளில் ஆய்வுப் பணி

வா.-18