பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/299

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

276 வாழையடி வாழை

இந்த ஆய்வை நிகழ்த்தினாலும், உலக சுகாதார அமைப்பு அமெ ரிக்க மருந்து நிறுவனங்களின் உதவியால் இந்த அம்மைப்பாலைக் குறைந்த விலைக்கு உற்பத்தி செய்து மூன்றாவது உலக நாடுகளுக்கு வழங்க இயலாத நிலையில் உள்ளது. ‘ஒருகாலத்தில் ஒன்று சேர்ந்து கூட்டாக ஆய்வு நிகழ்த்தியது டோக, இப்போது அவர்கள் எதிராளிகளாக மாறிவிட்டனர். இப்போது எல்லாம் இரகசியமாக்கப் பெற்று கழுத்தறுக்கும் போட்டி'யாகிவிடடது. இஃது எங்குபோய் நிற்குமோ என்பது எனக்குத் தெரியவில்லை'-இப்படி ஓர் அமெ ரிக்க அறிவியலறிஞர் கூறினார். இன்னொரு மலேசிய அறிவிய லறிஞர், “இந்தத் தொழில் நுணுக்கம் வளர்ச்சியுறும் நாடுகளில் பொருளாதார வாய்ப்புகளைத் தரும் என்று சோதிடம் கூறுவது ஒரு கனவே’ என்கின்றார். மலேரியா அம்மைப்பாலுக்கு நேரிட்ட கதிதான் ஏனைய தொழில் நுணுக்க உற்பத்திப் பொருளுக்கும் நேரிடும் என்ற அச்சம் அறிஞர்களிடையே நிலவுகின்றது. உண் மையில் வளரும் பல நாடுகள் உயிரியல் தொழில் நுணுக்கங்களால் உண்டாக்கப்பெறும் ஏற்றுமதியால் பெறும் வருமானம் குறைந்து கொண்டு வருகின்றது.

(2) புதிய இனிப்புப் பொருள் : சருக்கரை உற்பத்தி செய்யும் நாடுகளின்மீது ஒரு பேரிடி விழுந்துள்ளது. அமெரிக்காவில் நுரைப் புளியத்தின் துணை கொண்டு உயர்ந்த ஒருவகை சருக்கரைக் கதிர் toewfl (85toum (56,6ug (High structure corn syrup) grin guur ரிக்கும் ‘கோகா கோலா’, ‘கோகா பெப்சி என்ற பானங்களின் தயாரிப் பாளர்கள் தம் பானங்களில் பயன்படுத்தப்போகும் திட்டத்தை அறி விப்பு செய்ததால் ஏற்பட்ட விளைவு இது. தானுமேஷன் (Tanumation) என்ற தீவிர பன இனிப்புப பொருள் முதலில் மேற்கு ஆப்பிரிக்க நாட்டின் ஒரு கானகக் கனியினின்றும் எடுக்கபபெற்றது: இப்போது இஃது அமெரிக்காவில் நுண்மங்களைக் கொண்டு (Bacteria) உற்பத்தி செய்யப்பெறுகின்றது. இது சருக்கரையைப் போல் 2500 மடங்கு இனிப்புடையது. (சாக்கரினும் இத்தகையதே என்பதும் நினைவுகூர்தற்குரியது).

பல நாடுகள் சேர்ந்து அமைத்த நிறுவனம் ஒன்று ஜெனிடிக் பொறியியல் முறைகளைக் கையாண்டு தென்னை பனை காய்களி