பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/300

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கால்வழி இயலில் புரட்சி 277

னின்றும் இத்தகைய இனிப்புப் பொருளை உற்பத்தி செய்கின்றது. நிறுவனத்திற்குச் சொந்தமான தோட்டப் பண்ணைகளிலிருக்கும் மரங்களின் காய்களையே இதற்குப் பயன்படுத்துகின்றது. “இந்தப் பயன்கள் மூன்றாவது உலக நாடுகட்குப் போவது என்பது வேறு விஷயம்’ என்கின்றார் ஒரு வேளாண்மை அறிவியலறிஞர். இந்தப் பயன்கள் வளர்ந்து வரும் நாடுகட்கும் கிடைக்கச் செய்தால் அது கல்லதோர் அறிகுறியாகும்.

(3) முன்னேற்றமடைந்த நாடுகளிலுள்ள உயிரியல் - பொறி நுட்ப வல்லுநர்கள் தாம் பயிர்கட்கு நோய்களைத் தடுத்து நிறுத்துதல், உப்ஸ்ரீர், வறட்சி இவற்றைத் தாங்கும் தன்மைகள் இவற்றை விளை விக்க முடியும் என்று மெய்ப்பித்துள்ளனர். காலகத்தை (Nitrogen) கிலைநிறுத்தும் நுண்ணுயிரிகளை உண்டாக்கும் முறைகளில் நுண் பொறியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இவற்றால் உழவர்கள் பெரும் பயன் அடைவர்; உரத்திற்காகச் செலவிடும் தொகையும் இதனால் குறையும்.

(4) செயற்கை முறை ஒளிச் சேர்க்கையில் பகலவனின் ஏராளமான வெயிலின் உதவி கொண்டு வெப்ப நாடுகளிலும் குறை வெப்ப நாடுகளிலும் உணவு உற்பத்தியைப் பெருக்கலாம் என்று இந்திய வேளாண்மை ஆய்வு நிறுவனத்தின் இயக்குநரான டாக்டர் எச். கே. ஜெயின் யோசனை கூறினார். அணுத்திரளைக் கால்வழி இயலில் கடந்த பத்தாண்டுகளில் மேற்கொள்ளப்பெற்ற காட்சிச் சிறப்புடைய கண்டுபிடிப்புகள் செயல்முறை ஒளிச்சேர்க்கையின் திறனை மேம்பாடடையச் செய்யும் சாத்தியக் கூறுகளை அளித் துள்ளதாக இவ்வறிஞர் கூறுகின்றார்.

(5) மிகச் சிறிய தேங்காய்களை மாகாட்டில் காட்சிப் பொரு ளாக வைத்திருந்தனர். இவை எலுமிச்சம்பழத்தைவிடச் சற்றுப் பெரியவை; ஒரு கொத்தில் 200 காய்கட்குமேல் அடங்கியிருக்கும். இவை இலட்சத் தீவுகளிலிருந்து கொண்டுவரப்பெற்றிருந்தன. இவை கலப்பினச் சேர்க்கையால் உற்பத்தி செய்யப் பெற்றவை.