பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 வாழையடி வாழை

கண்ணால் காண முடியாத இந்த உயிரணுக்களே பெற்றோர்கட்கும் பி ள் ளை க ட் கு ம் தொடர்பினை உண்டாக்குபவை. ஆகவே, அவற்றின் அமைப்பினையும் ஏனைய சிறப்பியல்புகளையும் அறிந்து கொள்ளவேண்டியது இன்றியமையாததாகின்றது. இவ்வணுக்கள் மிக நுண்ணியனவாக இருத்தலின் அவற்றைப்பற்றி நீண்ட நாள்கள் வரை அறியக்கூடவில்லை. நுண்ணணுப் பெருக்கி என்ற கருவி புனைந்தியற்றிய பிறகு அதனைப் பயன்படுத்திப் பார்த்ததில் அவற்றில் நிறக்கோல்கள்’ என வழங்கும் நுண்ணிய பொருள்கள் இருப்பதை அறிந்தனர்.

விந்தணு: முதலில் விந்தணுவைப்பற்றித் தெரிந்து கொள் வோம். ஒரு தடவை கலவியில் ஓர் ஆணிடம் வெளிப்படும் ஒரு தேக்கரண்டியளவு விந்துவில் 300,000,000 விந்தணுக்கள் இருக்கக் கூடுமென்று அறிவியலறிஞர்கள் கருதுகின்றனர். இந்தப் பூ மண்டலத்தில் வாழும் கிட்டத்தட்ட இருநூறு கோடி மக்களை யுண்டாக்கக்கூடிய விந்தணுக்களைத் திரட்டி ஒரு சிறு ஆஸ்பரின் மாத்திரை அளவுள்ள உருண்டையாக்கிவிடலாம் என்றும் கூறு கின்றனர் ! இத்தகைய மிகச் சிறிய விந்தணுவின் அமைப்பினைப் படம் (படம்-4) விளக்குகின்றது, இந்த விந்தணுவின் தலையில் 23 கிறக்கோல்கள் மிக இறுக்கமாக அடைக்கப்பெற்றுள்ளன. சுருள் போன்ற உடலமைப்பு அந்த அணு நகர்வதற்கேற்ற முக்கிய ஆற்றலைத் தருகின்றது. வாலின் சவுக்கு போன்ற ஆட்டம் முன்னோக்கி நகர்ந்து செல்வதற்குத் துணை செய்கின்றது. விந்தணு முட்டையணுவைத் துளைத்துக்கொண்டு செல்லுங்கால் வால் அறுபட்டுத் தலை மட்டிலுமே உள்ளே செல்லுகின்றது. சென்று முட்டையின் உட்கருவுடன் இணையும்பொழுது தன்னிடமுள்ள 23 நிறக் கோல்களையும் அவிழ்த்துக் கொட்டிவிடுகின்றது. இந்த கிறக் கோல்களில் தந்தை வழி இறங்கக்கூடிய மரபுவழிப் பொருள்கள் யாவும் அடங்கியுள்ளன என்பதைச் சிறிதளவும் ஐய மின்றி அறிகின்றோம்.

முட்டை: இனி மானிட முட்டையின் அமைப்பினை விளக்கு வோம். இது விந்தணுவினைவிடப் பல்லாயிரம் மடங்கு பெரியது

4. 5pG&Tsbsir - Chromosomes.