பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்வின் தொடக்கம் 1 3

எனினும், அது இந்த நூலில் காணப்பெறும் முற்றுப் புள்ளியைவிட மிகச் சிறியது. இதனை ஊனக் கண்ணால் காண முடியாது. இந்த உலகிலுள்ள மக்கள் அனைவரின் பிறப்பிற்குக் காரணமான முட்டை களை எல்லாம் ஒரு காலன் சாடியில் அடைத்துவிடலாம் என்றும், ஆனால் அவை கருவுறுவதற்குக் காரணமான விந்தணுக்கள் ஓர் ஆஸ்பிரின் மாத்திரை பருமனுள்ள இடத்தில் அடங்கிவிடுமென்றும்

விந்தனு (மேலிருந்து காணும்பொழுது)

படம்-4. விந்தணுவின் அமைப்பினை விளக்குவது.

கணக்கிடப்பெற்றுள்ளது. இதிலிருந்து இரண்டன் அளவிற்கு முள்ள வேற்றுமையை ஒருவாறு உணரலாம். கருவுற்ற முட்டை கருப்பையில் புதைந்துகொள்ளும் வரை அதற்குத் தேவையான உணவுப் பொருள்களைக் கொண்டிருப்பதே அதன் பெரிய அள விற்குக் காரணம் ஆகும். முட்டை கருவுற்றதும் அதிலுள்ள மஞ்சம் கருப் பொருளை” கருவுற்ற முட்டை கருப்பையில் ஒட்டிக்கொள்ளும் வரை அதற்கு உணவாக அமைகின்றது. முட்டையில் நுழைந்த

5. மஞ்சட்கருப்பொருள் - Yolk.