பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிரணுப் பிரிவு 1 9

பாதியாகப் பிரியும் நிலையும், பத்தாம் நிலையில் இரண்டு தனித் தனி உயிரணுக்களாக உள்ள நிலையும் காட்டப்பெற்றுள்ளன.

மேற்கூறிய முறையில் இரண்டிரண்டாகப் பிரிந்த உயிரணுக்கள் இதே முறையில் ஒவ்வொன்றும் இரண்டிரண்டாகப் பிரிகினறன. இங்ஙனம் உயிரணுக்கள் இரண்டு நான்காகி, நான்கு எட்டாகி, எட்டு பதினாறாகி இவ்வாறு இரட்டித்துப் பல்கிப் பல இலட்சக் கணக்கான உயிரணுக்களாகின்றன. இவ்வாறு உ ண் டா ன உயிரணுக்கள் ஒரு பந்து போன்று பிழம்பாக அமைகின்றன. இது கருப்பகது என்று வழங்கப்பெறும். இங்ஙனம் உயிரணுக்கள் பல்குவதைப் படம் (படம்-8) விளக்குகின்றது. கருப்பங்து கருப் பையில் ஓடிக்கொண்டு தாயின் குருதியிலுள்ள ஊட்டப் பொருள் களைக் கொண்டு ஒரு புல்லுருவிபோல் வளரத் தொடங்குகின்றது. கருப்பந்தின் தொடக்க வளர்சசி முடிவுற்ற பிறகு அஃதாவது நான் காவது வாரத்தில் அவற்றின் உயிரணுக்கள். தசையணுக்கள். தோல் அணுக்கள். குருதியணுக்கள். எலும்பு அணுக்கள். மூளை அணுககள் போனற அணுககளாகப் பிரிந்து உடலின பல்வேறு பகுதிகளாக வளர்கின்றன. இங்குக் கூறப்பெற்றுள்ள செய்திகள் முற்றிலும் மரபு வழியை விளக்குவதற்குத் தொடர்புடையன அல்ல. எனினும், இதனைப் புரிந்துகொள்வதற்கு ஓரளவு துணை செய்யக் கூடுமாத லின் இவை சுருக்கமாகக் கூறபபட்டன.