பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கரு-உயிரணுக்கள்

உயிரணுக்கள் பல்கிப் பெருகும்பொழுது ஒரு குறிப்பிட்ட பருவத்தில் அவ்வணுக்கள் பல்வேறு வகை அணுககளாகப் பாகு பாடடைகின்றன என்று குறிப்பிட்டோமல்லவா ? ஒரு குறிப்பிட்ட பருவம் வரை இவ்வாறு பாகுபாடடைதலும் பல்கிப் பெருகுதலும் இணைந்து நடைபெறும். ஒரு நிலையில் சந்ததிப் பெருக்கததிற். கென ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையுள்ள உயிரணுக்கள் ஒதுக்கப் பெறும். இவை கரு-உயிரணுக்கள் என வழங்கபபெறுகினறன. இந்தக் கரு உயிரணுக்கள் ஆணின் விரைகளிலும் பெண்ணின் சூற்பைகளிலும்” தங்குகின்றன. இந்த அணுக்கள்தாம் வாழையடி வாழையாக மானிட இனத்தை நிலைபெறச செய்கின்றன. இவற்றி லிருந்தே விந்தணுக்களும் முட்டையணுக்களும் முதிர்ச்சியடை கின்றன. இவற்றை முறையே விந்தணுவின் தாய் உயிரணுக்கள்* என்றும், முட்டையணுவின் தாய் உயிரணுககள்” என்றும் கூறலாம். இவ்வணுக்கள் முதிராத நிலையில் தனிபபட்ட உயிரணு வகைகளாகப் பாகுபாடடையாத உடலனுக்களைப்” போலவே அமைப்பிலும் தன்மை யிலும் காணப்பெறுகின்றன. இவை ஆணின் முன்-குமரப்பருவம் வரையிலும் பெண்ணின் பூப்படையும் பருவம் வரையிலும் அப்படியே கிடக்கினறன.

350-2 usinggol - Germ cell. விரைகள் - Testes. Gibsoussir - Ovaries. ssg gossilsr forui e-u?rgol - Sperm mother cell. opti soLugoissr Briti 2-uorgg - Egg mother cell. o_Lsuggp - Somatic cell.

i