பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கரு-உயிரணுக்கள் 21

இந்த இனப் பெருக்க உயிரணுக்கள் ஆணின் முன் குமரப் பருவத்தில் விந்தணுக்களாக முதிரும்பொழுதும் பெண் பூப்படையும் காலத்தில் முட்டைகளாக முதிரும்பொழுதும் இவை புதியதொரு முறையில் பிரிகின்றன. இவ்வாறு பிரியும் முறை உடலின் உயிரணுக்கள் பிரிவதினின்றும், அல்லது இதற்கு முன்னர் இனப் பெருக்க அணுக்கள் பிரிவதினின்றும் முற்றிலும் வேறுபட்டது. ஒவ் வோர் உயிரணுக்களிலும் 46 நிறக் கோல்கள் உள்ளன என்பதை காம் அறிவோம். இவை 23 இணைகளாக அமைந்துள்ளன. ஒவ்வொரு இணையிலும் உள்ள கிறக் கோல்கள் உருவம், நீளம், பொது அமைப்பு போன்ற கூறுகளில் ஒரே மாதிரியாக இருக்கும். ஆனால் இக் கூறுகளில் ஓர் இணை நிறக் கோல்கள் மற்றோர் இணை நிறக் கோல்கள போல இரா. இணையாகும் கி ற க் கோல்கள் ஒத்துள்ள நிறக் கோல்கள்” என்று வழங்கப்பெறும். இவற்றுள் ஒன்று தந்தை வழியிலும் மற்றொன்று தாய் வழியிலும் வந்தவையாகும். இந்தக் கரு-உயிரணு பிரியுங்கால் ஒவ்வோர் இணையிலுமுள்ள ஒரு நிறக் கோல் தனியாகப் பிரிந்து 24 கிறக் கோல்கள் அடங்கிய ஓர் அரைப் பகுதியாகவும், ஒவ்வோர் இணையிலுமுள்ள மற்றொரு கிறக் கோல் தனியாகப் பிரிந்து 24 கிறக் கோல்கள் அடங்கிய மற்றோர் அரைப் பகுதியாகவும் போகின் றன. அஃதாவது இரண்டாகப் பிரிந்த ஒவ்வொரு கரு-உயிரணுவி லும் ஒவ்வோர் இணையிலுமிருந்து வநத நிறக் கோல்கள் அடங்கி யுள்ளன. இம் முறையைக் குறைத்துப் பகுத்தல்” என்றும் வழங்கு வர். இதனைப் படம் (படம்-9) விளக்குகின்றது. இதில் 4 வெவ் வேறு வகைகளைக் கொண்ட 8 கிறக் கோல்கள் உள்ளன. இந்த 8 கிறக் கோல்களும் 4 இணைகளாக உள்ளன. இந்த இன்ணைகளில் ஒன்று தாய் வழியாகவும், மற்றொன்று தங்தை வழியாகவும் வந்தவை. பால் உயிரணுக்கள்” முதிர்ச்சியடைவதில் தனித்தன்மை வாய்ந்த

இரண்டு உயிரணுப் பிரிவுகள் நடைபெறுகின்றன. இப் பிரிவுகளின்

7. 93gjsist fig (35tsbsir - Homologous coloured SO filS .

8. gisop> Lug);$356b - Reduction division (Miosis).

9, ur o_u$ygy - Sex cell.