பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 வாழையடி வாழை

போது முதிராத தாயணுவிலுள்ள நிறக் கோல்களில் பாதியே முதிர்ந்த சேயணுவில் அமைகின்றது. ஒரு குறிப்பிட்ட உயிரிக்குச் சிறப்பியல்பாகவுள்ள ஒவ்வொரு வகை நிறக் கோல் இணைகளிலும்

படம்-9. குறைத்துப் பகுத்தலை விளக்குவது.

குறிப்பு: வெண்மை நிறமுள்ளவை தாய்வழி வந்தவை , கறுப்பு நிற

முள்ளவை தந்தைவழி வந்தவை.

ஒன்று வீதம் இச் சேயணுக்களில் அமைவது குறிப்பிடத்தக்கது.

படத்தில் முதிர்ச்சியடையாத பால் உயிரணு (A) விலுள்ள 8 நிறக் கோல்களிலும் ஒத்துள்ள நிறக்கோல்கள் ஒன்றாக இணைகின்றன