பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கரு-உயிரணுக்கள் 23

(B). இவ்வாறு இணைந்த நான்கு இணைகளும் உயிரணுவின் நடு மையப் பரப்பில் வரிசையாக அமைகின்றன (C). ஒவ்வோர் ஒத்த இணைகளிலுமுள்ள ஒவ்வொரு நிறக்கோலும் ஒவ்வொரு துருவத்திற்குமாக நகர்கின்றது (D). ஆகவே, ஒவ்வொரு சேயணுவும் ஒவ்வொரு வகை நிறக்கோலின் ஒத்துள்ள ஒவ்வோர் இணையி லிருந்தும் ஒரு பிரதி நிதியையே ஏற்கினறது. இப்பொழுது நிறக் கோலின் எண்ணிககை பாதியாகிப் புதிதாக அமைந்த ஒவ்வொரு கரு-உயிரணுவும் ஒரு தொகுதியையே-ஆயினும் ஒரு முழுத் தொகுதியையே-ஏற்கின்றது (ப) இங்கனம் இவற்றினிடையே குறைத்துப் பகுத்தல் செயல் முற்றுப்பெற்ற நிலையில் இவை முதிர் வதற்குத் தயாராக இருக்கினறன எனறு கருதலாம். ஆனால், அதற்குப் பதிலாக இரண்டாவது பிரிவு ஒன்று நிகழ்கின்றது. இது முதற் பிரிவு போலன்றிச் சாதாரணப் பிரிவாகவே நடைபெறுகின்றது: இதில் ஒவ்வொரு நிறக் கோலும் நீளப்பாங்கில் பிரிந்து (F) ஒவ் வொரு சேய் உட்கருவும் தாய் உயிரணுவின் சேய் உயிரணுக்களின் ஒவ்வொரு கிறக் கோலின் பிளவுண்ட பகுதிகளில் ஒன்றினைப் பெறு கின்றது. படத்தின் அடியில் முதிர்ச்சியடைந்த நான்கு பால் உயிரணுக்கள் இருப்பதைக் காண்க.

இந்த அடிப்படையில்தான் ஆணின் விந்தணுக்களும் பெண் ணின் முட்டைகளும் முதிர்ச்சியடைகின்றன. இதனைப் படம் (படம்-10) விளக்குகின்றது. படத்தில் விந்தணுக்கள் உண்டாவதும், முட்டையணுக்கள் உண்டாவதும் ஒப்பிட்டுக் காட்டப்பெற்றுள்ளன. இங்கு நடைபெறும் இரண்டு முதிர்சசிப் பிரிவுகளில் ஒரு விந்தணு வின் தாய் உயிரணுவிலிருந்து நான்கு விந்தணுக்களும் ஒரு முட்டை யின் தாய் உயிரணுவிலிருந்து ஒரு முட்டையும் மூன்று பயனற்ற துருவ உயிரணுக்களும் உண்டாவதைக காண்க. மேலும், இந்த இரண்டு பிரிவுகளிலும் விந்தணு முட்டையணுக்களிடையே யாதொரு

10. சாதாரணமாகப் பிரிவதில் இந்த எட்டு ஒற்றை நிறக் கோல்களும் ஒரே வரிசையில் அமையும் (படம்-7ல் ஏழாவது நிலை யில் 4 ஒற்றை நிறக் கோல்களும் ஒரே வரிசையில் அமைந்திருப் பதைக் காண்க).

1 1. gigosu oluoggysir - Polar bodies.