பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கரு-உயிரணுக்கள் 25

பொருள்களும் நிரப்பப்பெற்றுள்ளன என்பதை நாம் அறிவோம். இந்த முதிர்ச்சி பெறாத மஞ்சட் கருப்பொருளால் கிரம்பிய முட்டை உயிரணு நான்கு சம உயிரணுக்களாகப் பிரிந்தால், அதனுடைய வளர்ச்சிக் காலத்தில் சேமிக்கப்பெற்றுள்ள பொருள் களும் நான்கு கால் பகுதிகளாகப் பிரிவுபட நேரும். இயற்கையில் இத்தகைய தவறுதல்கள் நடைபெறுதல் அரிது. இங்கு நடைபெறும் இரண்டு முட்டை முதிர்ச்சிப் பிரிவுகளிலும் சமமற்ற பிரிவினையே நடைபெறுகின்றது. படத்தின் வலப்புறமுள்ள பகுதியில் இரண்டு தடவைகளிலும் பெரிய முட்டையின் மேற்புற ஓரத்தில் பிரிவினை நடைபெறுவதையும், இந்த சைட்டோபிளாஸ்மிக் பிரிவினால் உண் டாகும் நான்கு உயிரணுக்களில் ஒன்றில் மட்டிலும் ஆதி உயிரணு வில் சேமிக்கப்பெற்றுள்ள மஞ்சட் கருப்பொருளும் பிற பொருள் களும் அப்படியே இருத்தப்பெற்றிருத்தலையும் காண்க. ஆயின், முதிராத ஆண் உயிரணுவில் யாதொரு மஞ்சட் பொருளும் பிற பொருள்களும் இராததால் அது மேற் குறிப்பிட்ட இரண்டு முதிர்ச்சிப் பிரிவுகளிலும் சமமாக நடைபெறுகின்றன ; இவ் விளைவினால் ஏற்றபட்ட நான்கு உயிரணுக்களும் நீந்திச் செல்லும் நான்கு விக் தணுக்களாக மாறுகின்றன.

ஆணிடம் உண்டாகும் விக்தணுக்களின் எண்ணிக்கைக்கு யாதொரு வரையறையும் இல்லை அளவில்லாமல் இவை உண்டா கின்றன. ஓர் ஆடவன் புணர்ச்சியின் ஒவ்வொரு தடவையிலும் 200,000,000 லிருந்து 500,000,000 க்கு மேற்பட்ட விந்தணுக் களை வெளியேற்றுகின்றான். ஆயினும் தொடக்கத்திலிருந்தே அவனுடைய இனப் பெருக்க உயிரணுக்களின் எண்ணிக்கை குறைவு படுவதில்லை. உடலிலிருக்கும் விந்தணுக்களை உற்பத்தி செய்யும் பொறியமைப்பு செயற்படும் வரையிலும், உடல் அதற்குத் தேவை யான பொருள்களைத் தரும் வரையிலும் இந்த விந்தணுக்கள் தொடர்ந்து உற்பத்தியாகிக்கொண்டே இருக்கும்.

ஆனால், பெண்ணிடம் உண்டாகும் முட்டைகளின் எண்ணிக் கைக்கு ஒரு வரையறை உண்டு. எப்பொழுது வேண்டுமாயினும் இவை வெளிபபடுவதுமில்லை. ஒரு பெண்-குழவி’ பிறக்கும் பொழுது அதனுடைய சூற்பைகளில் கிட்டத்தட்ட 200,000