பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 வாழையடி வாழை

முட்டையணுக்கள் உள்ளன. இ வ. ற் று ள் பெரும்பாலானவை பெண்ணின் பிள்ளைப் பருவத்தில் தேய்ந்து செயற்படாமல் போகின் றன. பெண் பூப்படையும் பொழுது அவளிடம் 30,000 உயி ரணுக்களே உள்ளன. இந்த உயிரணுக்களிலும் சுமார் 400 அணுக் களே முதிர்ச்சியடைகின்றன. இவை பூப்பின் தொடக்கத்தி லிருந்து சூதக ஒய்வு ஏற்படும் வரையிலும் (அஃதாவது பெண்ணின் 13 அல்லது 14 வயதிலிருந்து சுமார் 45 வயது வரையிலும்) மாத விடாய் வட்டத்தி ை நடுப்பகுதியில் சுமார் 28 நாட்களுக்கு ஒரு முட்டையணு வீதம் வெளிபபடுகின்றன. இருபத்தெட்டு நாட்களில் ஒரு முட்டை ஒரு பெண்ணிடம் முதிர்ச்சியடைவதற்குள் ஒர் ஆணிடம் கான்கு அல்லது ஐந்து நாட்களில் கோடிக்கணக்கான விந்தணுக்கள் முதிர்ச்சியடைந்துவிடுகின்றன.

இனப்பெருக்க உயிரணுக்களில் மட்டிலும் குறைத்துப் பகுத்தல் முறை நடைபெறவேண்டிய இன்றியமையாமை என்ன ? ஒவ்வொரு வகை உயிரிகளிலும் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையுள்ள நிறக் கோல்களே உள்ளன. எடுத்துக்காட்டாக டிரோஸாபிலா என்ற ஒரு வகை ஈயின் உயிரணுவில் 4 இணைகளும், எலியின் உயிரணுவில் 20 இணைகளும் மானிட உயிரணுவில் 23 இணைகளுமே உள்ளன. உயிரியின் வகை மாறாமலிருப்பதற்கு இந்த நிறக் கோல்களின் எண்ணிக்கை யும் மாறாமலிருக்க வேண்டும். மேற்குறிப்பிட்ட குறைத்துப் பகுத்தல் செயல் இல்லையாயின் விந்தணு அல்லது முட்டையணு 46 நிறக் கோல்களைக் கொண்டிருக்கும். அவை இணைந்து கருவுறுங்கால் கருவுற்ற முட்டையின் உயிரணுக்களில் 92 கிறக் கோல்கள் அமைந்துவிடும் அடுத்த பரம்பரை 184 கிறக் கோல்களிலும், அதற்கு அடுத்த பரம்பரை 368 நிறக் கோல்களிலும், இவ்வாறு வரம்பின்றியும் போய்க்கொண்டே இருக்கும். குறைத்துப் பகுத்தல் செயல் இங்ஙனம் வரம்பின்றிப் போவதைத் தடுத்து கிறுத்துகின்றது.

18. gb - Puberty. 14. முதிர்ச்சியடை - Mature.

15. சூதக ஒய்வு - Manopause. ! 6. lor:bol still Sulli-th - Menstrual cycle.