பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கரு-உயிரணுக்கள் 27

மேற் கூறப்பெற்றவற்றிலிருந்து ஒரு குறிபபு புலனாகின்றது. இயற்கையன்னை மனிதனைப் படைக்குமபொழுது அவனிடம் கோடிக்கணக்கான உடல் அணுக்களைத் தருகினறாள். இவற்றை அவன் தன் விருப்பப்படி கையாளலாம். இந்த அணுக்களைத். தவிர குறைந்த அளவு எண்ணிககையுள்ள கரு-உயிரணுக்களை யும்’ அவனிடம் தருகினறாள். அவனிடம் ஓரளவு நம்பிக்கை யின்றியே இந்த உயிரணுக்களிலுள்ள பொருள்களை கன்றாக இறுகக் கட்டித் தருகினறாள் என்றே கருதலாம். இவற்றை அப்படியே வழிவழியாகச் சந்ததியினருககு வழங்க வேண்டும் என்றே தருகின்றாள். கரு-உயிரணுக்களில் அடங்கிக கிடக்கும் மரபு வழிக் கூறுகளை மனிதன் தவறாகக கையாளவும் முடியாது; அவற்றைத் தன் விருப்பபபடி மாற்றியமைக்கவும் முடியாது என்று கருதியே இத்தகைய முறையை அவள் கையாண்டுள்ளாள் என்று எண்ணத் தோன்றுகின்றது.

17. U-37@ - Germ cell.