பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல் 6

மரபுவழி இறங்காப் பண்புகள்

மனிதள் இவ்வுலகில் தோன்றிய நாள் தொட்டு, தான் சேமித்து வைத்துள்ள சொத்துகள் முதலியவற்றைத் தன் பிள்ளைகட்குத் தருவதுடன் தான் வளர்த்த தன்னுடைய உடல் உள்ள இயற்பண்பு களையும் அவர்கட்குத் தந்துவிடலாம் என்று எண்ணிக் கனவு கண்டுதான் வந்திருக்கின்றான். மரபுரிமையாகப் பெறும் இந்த இருவகைச் செல்வங்கட்கும் பேராபத்து வந்துவிட்டது என்பதை மனிதன் அண்மைக் காலத்தில் அறிந்துகொண்டுவிட்டான். பெரும்பாலான நாடுகளில் சொத்துரிமை வரிகளால் இச் செல்வம் கடத்தப்பெறுவது பெரிய அளவில் தடைப்பட்டுள்ளது. இதை ஓரளவு மனிதன் தனது சாமர்த்தியத்தால் சிறிதளவு சமாளித்துக் கொள்ளுதல் கூடும். ஆனல், இயற்கையன்னை மனிதனது உடல் உள்ள உடைமைகட்கும் உடல் உள்ளப் பண்புகட்கும் விதித்துள்ள வரியை நோக்க, மேற் குறிப்பிட்ட அரசு வரி ஒன்றுமே இல்லை என்று சொல்லிவிடலாம். இத்தகைய உயிரியல் மரபுரிமைபற்றி அண்மையில் கண்டறியப்பெற்ற அறிவியல் உண்மைகள் இதுகாறும் நம்பிக்கையாகக் கொண்டிருந்த பல கருத்துகளை முற்றிலும் தவறு எனக் காட்டி விட்டன : பொய் என்று மெய்ப்பித்துவிட்டன.

மானிடக் கரு வளர்ச்சியின்பொழுது ஒரு குறிப்பிட்ட பருவத் தில் இனப் பெருக்கத்திற்கென ஒரு குறிப்பிட்ட அளவு உயிரணுக்கள் ஒதுக்கப்பெறுகின்றன என்று முன்னர்க் குறிப்பிட்டோமல்லவா ? இவை எங்ஙனம் முதிர்ச்சியடைந்து முடடையணுக்களாகவும் விங்

1 . Quu L16ri-j - Attribute 2. Glrgilflsmun sufi — lnheritance tax.