பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மரபுவழி இறங்காப் பண்புகள் 3 |

சந்ததியினருக்கு வழங்குவதற்கு யாதொரு வழியும் இல்லை. இந்த வழியை நம்மைப் படைததவன நமக்குக் காட்டவில்லை !

மரபுவழி முறையில் இயற்கையன்னை பல வியத்தகு அருஞ் செயல்களைப் புரிகின்றாள். ஆனால், நம்முடைய படிப்பினாலும் உழைப்பினாலும் ஏற்படும் அநுபவங்கள் நமது மூளையில் சுவடு களாக அமையும்பொழுதெல்லாம் நம்மிடம் வளப் பொறியமைப் பிற்குக் காரணமாகவுள்ள ஒவ்வொரு ஜீனு'ம் இதற்கேற்ற மாற்றங் களைப் பெறுவதில்லை. அங்ஙனமே, யோகாசனப் பயிற்சியாலும். ‘கசரத் பயிற்சியாலும் நம் உடலில் நேரிடும் மாற்றங்களுக்கேற்ப தசைக் கட்டுச் செயல்களில் பங்குபெறும் ஜீன்கள் தம்முடைய ஆற்றலில் உயர்வடைவதில்லை. நம்முடைய தந்தையிடமுள்ன. அறிவு. ஆற்றல் பிற திறன்கள் யாவும் நம்மிடம் அமைந்துள்ளனவா என்பதை எண்ணிப்பார்த்தால் இவ்வுண்மை நமக்குப் புலனாகாமற் போகாது. நம்முடைய தந்தை வழியாகப் பெற்ற பாதி நிறக் கோல்கள் “தற்செயல்’ அறுதியிடுவதால் பெற்றவை. அவருடைய தலை சிறந்த பண்புக்குக் காரணமாகவுள்ள கிறக் கோல்களில் ஒன்றாவது நமக்கு வந்திருக்க வேண்டுமென்பது உறுதியில்லையல்லவா? அங்ஙனமே, அவர் இன்றைய நிலையிலிருப்பதற்கும் அவரிடமுள்ள மரபுவழிப் பண்புக்கூறுகள்தாம் காரணம் என்று சொல்லமுடியா தல்லவா ? ஜீன்கள்தாம் சிறப்பியல்புகளை அறுதியிடுவதில்லை என்பதும் ஈண்டு அறியத்தக்கது. ஒரு குறிப்பிட்ட சந்தர்ப்பத்தில் அவை ஒரு மனிதனின் துலக்கத்திற்கான” சாத்தியக் கூறுகளையே’ (நிகழக் கூடியனவற்றை) அறுதியிடுகின்றன.

நம்முடைய தந்தை ஒரு சிறந்த குடிமகனாகத் திகழலாம் : அல்லது அகதி'யாகத் திண்டாடலாம். அவர் ஓர் அரசியல் அறிஞராகவோ, அறிவியல் வல்லுநராகவோ, இசைக்கலைஞராகவோ இருக்கலாம். இவற்றால் அவரிடம் எத்தகைய நிறக்கோல்கள் உள்ளன என்று சொல்லமுடியாது. அவருடைய சிறப்பியல்புகளின் மூலம் அவருடைய நிறககோல்களின் இயல்பு வெளிப்படாது

7. gilb&th - Develop. 8. *T, Sud, dia-pt — Possibility.