பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 வாழையடி வாழை

போயினும், கம்மிடமும் நம்முடைய தந்தையிடமும் பொதுவாகக் காணப்பெறும் வழக்கத்திற்கு மாறான பண்புக்கூறுகளை ஆராய்ந்து அவருடைய கிறக்கோல்களில் எது நம்மிடம் வந்துள்ளது என்று ஊகம் செய்யலாம், நம்முடைய தாயின் நிலைமையும் இதுவே. நம் முடைய தந்தை அளித்தது போலவே அவளும் கிறக்கோலகளில் பாதியை நமக்கு அளிக்கின்றாள். அதற்கு மேலாக நாம் வேர்விட்டு வளர்வதற்கேற்ற விளைநிலமாகவும் அவள் உதவுகின்றாள்; பிறப பதற்கு முன்னர் நமக்குச் சூழ்நிலையை அமைததுத் தருகின்றாள்: இந்தச் சூழ்நிலையின் விளைவுகளைப் பின்னர் விளக்குவோம். ஆயினும், மரபுவழியில் பங்கு பெறுவதில் அவள் தந்தையைவிட அதிகமாகப் பங்கினைப் பெறுவதில்லை என்பது ஈண்டு அறியத் தக்கது. ஒரு பெற்றோருக்குப பிறக்கும் குழவிகள் தோற்றத்தில் தந்தையைவிடத் தாயைப்போல அதிகமாகக காணப் பெறாதிருப பதிலிருந்து இது மெய்ப்பிக்கப்பெறுகின்றது.

நாம் எந்த அளவுக்கு நம்முடைய குழந்தைகட்கு நம்முடைய பண்புக் கூறுகளைக் கடத்தலாம். அல்லது கடத்த முடியும் என்ற எண்ணம் ஒவ்வொருவரிடமும் எழுதல் இயல்பு, முதலில் மரபுவழி இறங்காப் பண்புகள் யாவை என்பதைக் காண்போம்.

ஒரு சிறந்த அறிஞனாவதற்கேற்ற வாய்ப்பினைத் தரும் ஜீன்களைக் கொண்டு ஒருவரது வாழ்க்கை தொடங்கியிருந்திருக்க லாம், ஆனால் வறுமையினாலும், நோயினாலும், மடிமையினாலும் அல்லது நற்பேறு இன்மையினாலும் அவர் தக்க கல்விபெறும் வாய்ப்பினை இழந்திருக்கலாம். ஆனால், அவருக்குப் பிறககும குழவிகளிடம் அவருடைய அறிவே அமைவதற்கு வாய்ப்பு உண்டு : அவர் அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களில் பல பட்டங்களைப் பெற்றால் என்ன அறிவு உண்டாகுமோ அத்தகைய அறிவினைத் தரவல்ல ஜீன்கள் அவா.கள் குழந்தைகள்பால் அமைவதற்கு நல்ல வாய்ப்புகள் உள்ளன.

அல்லது நம்முடைய பெண் சிறுமியாக இருக்கும்போது ஓர் அழகிய பெண்ணாக இருப்பதாகக் கருதுவோம். தற்செயலாக,

9. பண்புக்கூறு - Trait.