பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மரபுவழி இறங்காப் பண்புகள் 33

நேரிட்ட விபத்தொன்றின் காரணமாகவோ, அல்லது குடும்பத்திற்கு ஏற்பட்ட பல இடர்ப்பாடுகளின் காரணமாகவோ, அல்லது கொடுமை யான யாதொரு கோயின காரணமாகவோ அந்த மங்கை தன் அழகினை இழகக நேரிடடால் அவள் அழகாக இருக்கும்பொழுது பெற்ற குழுவிகளுக்கும் அவள் அழகினை இழந்த பிறகு பெற். றெடுதத குழவிகளுககும் சிறிதும் வேறுபாடு இராது.

ஒருவரிடம் எல்லா அழகும், வலிமையும், திறமையும் பொருந்தி யிருந்து போர்க்களத்தில் ஏற்பட்ட விபத்துக்களால் அடிபட்டு, கண்ணிழந்து. உறுப்புகளை இழந்து கிரந்தரமாகவே சப்பாணியாகி விடுவதாகக் கருதுவோம். இந்த நிலையில் அவருக்குப் பிள்ளைப் பேறு ஏற்படுகின்றதாகவும், எண்ணுவோம். அவர் போருக்குப் புறப்படுவதற்கு முன்னர் அவருக்குப் பிள்ளைப் பேறு ஏற்பட்டிருந் தால் அக் குழவிகள் என்ன நிலையில் இருக்குமோ, அதே நிலையில் தான் இக் குழந்தையும் இருக்கும். போரில் அவருக்கு ஏற்பட்ட இடர்கள் யாவும் குழந்தையைப் பாதிக்கா.

ஒருவர் வயது முதிர்ந்து கிழவராகி விட்டார் என்று வைத்துக் கொள்வோம். தொண்ணுறு வயதுள்ள தொண்டு கிழவரான பின்பும் அவர் வன்மையுள்ள விந்தணுக்களை உற்பத்தி செய்யக் கூடுமாயின்,-இததகையோர் இருப்பதற்குச் சான்றுகள் உள்ளனஅவ்வணுக்களில் அவர் பதினாறு வயதுள்ள காளையாக இருந்த பொழுது உற்பத்தி செய்த விந்தணுக்களிலுள்ள மரபுவழிப் பண்புக் கூறுகளைப் போன்ற கூறுகளே அடங்கி இருக்கும். ஒரு பெண் ணின் இனப் பெருக்க வாழ்வு ஆணின் இனப் பெருக்க வாழ்வை விடக் குறுகியதாயிருப்பினும், அவள் நாற்பத்தைந்தாவது வயதில் உண்டாக்கும் முட்டையணுக்களுககும் அவள் பதினாறு வயதில் உண்டாக்கின முட்டையணுககளுக்கும்-அஃதாவது அவற்றிலுள்ள ஜீன்களின் தன்மைகளில்-யாதொரு வேற்றுமையும் இருக்காது.

எனினும், பல்வேறு நிலைகளில் ஒரு பெற்றோர்க்குப் பிறக்கும்

குழுவிகளிடையே வேற்றுமை இருக்கத்தான் செய்யும். ஆயின்,

இது மரபுவழிக் கூறுகளின் அடிப்படையில் அமைந்ததன்று.

வா. - 8