பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 வாழையடி வாழை

நாற்பது வயதிற்கு மேற்பட்ட பெண் பல்வேறு நோய்களினாலும் அல்லது வேறு உடற்கோளாறுகளாலும் பீடிக்கப்பட நேரிடும். இந் நிலையில் அவள் தாய்மையை அடைய நேரிட்டால், அவள் குழந்தைக் குத் தரும் உட்புறச் சூழ்நிலை தகுந்ததாக அமையாது. ஆயின், தாயாக இருப்பினும் அல்லது தந்தையாக இருப்பினும் குழவிக்குத் தரும் வெளிப் புறச் சூழ்நிலை உட்புறச சூழ்நிலையைவிட மிகவும் முக்கியமானது. இந்த வெளிப்புறச் சூழ்நிலையில் பெளதிகச் சூழ் நிலையும் உள்ளம்பற்றிய சூழ்நிலையும் அடங்கும் என்பது கவனிக்கத் தக்கது. அடியிற் கண்ட எடுத்துக்காட்டால் இது தெளிவுறும்.

இளைஞர் ஒருவர் மதுபானம் பருகும் பழக்கம் இல்லாத நிலை

யில் மகபபேறு அடைகின்றார். பததாண்டுகட்குப் பிறகு போரில் தொண்டாற்றியதன் விளைவாக மதுபானப பழக்கம் அவருக்கு ஏற்படுகின்றது : எப்பொழுதும் மயக்க நிலையிலேயே இருக் கின்றார். இப்பொழுது அவருக்கு ஒரு குழந்தை பிறக்கின்றது. இந்த இரண்டு குழவிகளில் இரண்டாவது குழந்தை குடிப்பழக்கத்தை மேற்கொள்ளக் கூடும். இஃது இரண்டாவது குழவிக்குத் தந்தை யிடமிருந்து பெற்ற ஜீன்களிடையே “மதுபானப பழக்கம்’ இருப்பதால் பெற்றதன்று ஜீன்களில் அததகைய பழக்கம் ஒன்றும் இல்லை முதல் மகன். குடிவெறியில்லாத அமைதியான சூழ்நிலையில் வளர்க்கப்பெற்றதால் அவனிடம் அப பழக்கம் அமைய வழி இல்லை. இரண்டாவது மகன் குடிவெறி நிலவும் சூழ்நிலையில் வளர்ந்ததால் அவனிடம் இப் பழக்கம் அமைவதற்கு வழியேற்படுகின்றது. மது பானப் பழக்கம் மரபு வழியாக இறங்கும் ஒரு பண்புக் கூறு அன்று. அது சூழ்நிலையால் பெறும் பண்பாகும்.

தக்கார் தகவிலர் என்ப தவரவர்

எச்சத்தாற் காணப் படும்.” என்ற குறள் கூறும் கருத்தும் இதுவே என்க. தாயைத் தண்ணீர்த துறையில் பார்த்தால் பெண்ணை வீட்டில் பார்க்க வேண்டியதில்லை’

10. o_t” | 4 p Gy s6oo6o – Internal Environment.

1 1. Q6,1sfi'lsp (5th floose - External Environment. 12. குறள்-114.