பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மரபுவழி இறங்காப் பண்புகள் 35

என்ற உலகியல் பழமொழியும் இதனையே வற்புறுததுகின்றது. எனவே, மரபு வழியும் சூழ்நிலையும் இடைவிடாது இடை வினை புரிவதாலேயே மக்களிடம் பண்புகள் அமைகின்றன என்பது பெறப்படும். மரபுவழி தவறிய இடத்தில் சூழ்நிலை அதனை கிறைவு செய்யும். எடுத்துக்காட்டாக ஓர் இசை புலவனின் மகனிடம் இசைப்புலமை மரபு வழியாக இறங்காது. அவன் தன் மகனுக்கு அளிக்கும் பயிற்சியாலும் வாய்ப்பாகத் தரும் சூழ்நிலை யாலும் அவன் மகனும் சிறந்த பாடகளுக அமைய ஏதுவுண்டு.

நன்கு கல்வி கற்று. நன்னிலையில் அமர்ந்து நல்வாழ்வு வாழும் தந்தை தன் மகனுக்கு வாழ்வில் நல்ல தொடக்கத்தை அமைத்துத் தரலாம். கசரத பழகும் தந்தை தன் மகன் உடல்நிலையை நன் முறையில் அமைத்துத் தரலாம். உடல் நலத்துடனும் அறிவுடைமை யுடனும் வாழும் தாய் தான் பெற்றெடுக்கும் குழவிக்கு அது பிறப பதற்கு முன்னும் பின்னும் எண்ணற்ற முறைகளில் நல்ல சூழ் கிலையை அமைத்துத் தரலாம். கல்ல குடிவழிப் பண்புக் கூறுகளைப் பெறும் குழந்தை தக்க வளர்ப்பு முறையின்றி கன்னிலையில் அமையாது போயினும் போகலாம். சூழ்நிலை தரும் விளைவுகட்கும் ஒரு வரம்பு உண்டு. ஒருவனது வாழ்க்கை நன்முறையில் அமை வதற்கும் பல்வேறு விசைகள் காரணமாகின்றன. இதனைப் பின்னாக் காண்போம்.

18, 6,760+&sir - Forces.