பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல் 7

தவறான நம்பிக்கைகள்

கலவி புரிவதிலும் மக்கட்பேறு பெறுவதிலும் எத்தனையோ தவறான நம்பிக்கைகள் மக்களிடையே நிலவுகின்றன. அன்பொடு பிணைந்த இளந்தம்பதிகள் தமக்குப் பிள்ளைப பேறு ஏற்பட வேண்டு மாயின் நல்ல மனநிலையிலிருந்துகொண்டு கலவி புரிய வேண்டும் என்று கருதுவது அவற்றுள் ஒன்று. இந்த கம்பிக்கையை அவர் களிடமிருந்து அகற்றப் புகுவது குழந்தைகளை அவர்கள் விரும்பும் கலைப்பொருள்கள் இல்லையென்றுசொல்லி அழவைப்பது போலாகும். இதுகாறும் அறிந்தவற்றிலிருந்து நாம் ஒன்றை நினைவிலிருத்த வேண்டும். அரண்மனையின் அந்தப்புரத்தில் பஞ்சணையின்மீது தம்பதிகள் கொஞ்சிக் கலவி புரிவதாலோ, அல்லது காதலர்கள் மாட்டுத் தொழுவத்தில் காற்றோட்டமில்லாத இடத்தில பயந்து கொண்டு கலவி புரிவதாலோ, அல்லது தம்பதிகளின் அன்பு கொடு முடியிலிருக்கும்பொழுது இணைவதனாலோ, அல்லது அவர்கள் யாதோ ஒரு காரணத்தின் பொருட்டுத் தம்மிடையே பேசசு வார்த்தை கூட இல்லாத நிலையில் புணர்வதாலோ கருப்ப மற்றுக் குழவி பெற நேரிட்டால் அக் குழவியிடம் பெற்றோரிடமிருந்து கடத்தப்பெறும் மரபுவழிப் பண்புக கூறுகளில் யாதொரு மாற்றமும் இராது என்பதை நாம் அறிதல் வேண்டும்.

திருமணம் ஆகாத ஒரு பெண்ணுக்குப் பிறக்கும் குழந்தை சில சமயம் முறைப்படி பிறக்கும் குழந்தையினின்று சில கூறுகளில் மாறுபடலாம். அக் குழந்தை மிக நுண்மையுடையதாக அமைந்து விடலாம் : சிறு பொருளுக்கும் உள்ளம் நோகக்கூடியதாகவும் இருக்கலாம். சில சமயம் அது பேரறிஞனாக வளரும் வாய்ப்பினை யும் பெறலாம் ; சில சமயம் முதல் தர குற்றவாளியாகும் வாய்ப்பும்