பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 வாழையடி வாழை

இக் குழந்தையைச்சுற்றி வயதுமுதிர்ந்த அதன் பெற்றோர்களைத் தவிர வயதுமுதிர்ந்த அண்ணன்மாரும் தமக்கைமாரும் அவர் களுடைய நண்பர்களும் சதா சூழ்ந்துகொண்டு இளக்காரம்’ கொடுப்பதால் அது கெட்டுப்போதற்கேற்ற சூழ்நிலை உண்டா கின்றது. அங்ஙனமே, பதினேழுவயதிற்குக் குறைவாகவுள்ள தாய்மார்களிடமும் கருப்பை சூழ்நிலையும் குழவி பிறந்தபிறகு புறத்தேயுள்ள நிலைமைகளும் சரியாக இல்லாதிருக்கின்றன. தாய் முதிர்ச்சி பெறாதநிலை அவளுக்கும் குழந்தைக்கும் உடல்நிலையில் கேடு தருவதுடன், தக்க சமூக அநுபவம் இல்லாமையால் உள நிலைக்கும் கேடு தருவதாகின்றது.

கலவிபுரிதல், தாய்தந்தையராதல் ஆகியவற்றுடன் தொடர் புள்ள செய்திகளிலும் சில தவறான நம்பிக்கைகள் நிலவுகின்றன. ஒரு பெண் பிராணியை இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட ஆண் பிராணிகளுடன் தொடர்ந்து பொலியச்செய்தால், முதலில் தொடங்கின ஆணின் செல்வாக்கு பின்னர் தொடங்கின ஆணுக்குப் பிறக்கும் குட்டிகளிடம் காணப்பெறும் என்பது ஒரு கொள்கை. ஓர் ஆண் பிராணி ஒரு தாழ்ந்த இனத்துடன் பொலிந்து பின்னர் வேறுஒரு பெண் பிராணியுடன் பொலிந்தால் தாழ்ந்த இனப் பெண் பிராணிகளிடமுள்ள ஒருசில சிறப்பியல்புகள் இரண்டாவது பெண் பிராணிகட்குப் பிறக்கும் குட்டிகளிடம் காணப்பெறும் என்பது மற்றொரு கொள்கை.” ஒர் ஆண் பிராணியும் பெண் பிராணியும் தொடர்ந்து பொலிந்தவண்ணம் இருந்தால் அவற்றிற்குப் பிறக்கும் குட்டிகள் யாவும் தாய் தந்தையர்களைப்போலவே காணப்பெறும்; ஒரு பெண் பிராணி ஒரே ஆணுடன் எவ்வளவுக்கெவ்வளவு அடிக்கடி பொலிவதற்குச் சந்தர்ப்பம் பெறுகின்றதோ, அதற்கேற்ப அதற்குப் பிறக்கும் குட்டிகள் யாவும் ஆண் பிராணியையே ஒத்திருக்கும். இக் கொள்கைகள் யாவும் மானிட இனத்திற்கும் பொருந்தும் என்று நம்புகின்றனர். இருவர் நீண்டகாலம் சேர்ந்து வாழ்ந்தால் சூழ்நிலை, உணவுமுறை, பழக்கவழக்கங்கள், வேறு வாழ்க்கைநிலைமைகள் ஆகியவற்றின் பொதுவிளைவுகள் இருவரிடமும் காணப்பெறும்

1 . Telegony, 2. “Infection.’’