பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 வாழையடி வாழை

தன் ஒரு குட்டையான கருப்பர் இனத்தைச் சார்ந்த பெண்ணுடன் கலவிபுரிந்து ஒரு சாதாரணக் குழவியைப் பிறப்பிக்கலாம். இக் குழந்தை சற்றுப் பெரிதாக அமைவதால் பிரசவம் சற்றுச் சிரம மாகவே இருக்கும். இங்ஙனம் ஒரே இனத்தைச் சேர்ந்த பெரிய

படம் - 13. வெள்ளையனும் பிக்மி இனத்தைச் சேர்ந்த குள்ளியும் இணைந்து குழவிபெறுதலைக் காட்டுவது.

உருவமுடைய மனிதனும் சிறிய உருவமுடைய பெண்ணும் இணைவ தால் ஏற்படும் பிரசவத்தில் பெரும்பாலும் சிசேரியன் அறுவை முறையை மேற்கொள்ளவேண்டிவரும் என்பது ஈண்டு அறியத் தக்கது.

இவ்விடத்தில் ஓர் உண்மையை நாம் மனத்திலிருத்த வேண் டும். மானிட இனம்முழுவதும் ஒரே பிரிவினைச் சார்ந்தது. ஆகவே, கருநிறப்பெண்ணுக்கும் வெண்ணிற ஆணுக்கும் பிறக்கும் குழவிகள் யாவும் மலடற்று இருக்கும். கோழியும் வாத்தும் வெவ்வேறு இனத்தைச் சார்ந்தவையாதலின் அவற்றின் கலவியினால் சந்ததியே