பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிறக் கோல்களும் ஜின்களும்

ஒவ்வோர் உயிரியின் ஒவ்வோர் உயிரணுவிலும் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையுள்ள கிறக் கோல்கள் உள்ளன என்றும். இவை ஒத்துள்ள இணைகளாக அமைந்து கிடக்கும் என்றும், இவற்றுள் ஒவ்வோர் இணையிலும் உள்ள ஒன்று தாயின்வழி வந்தது என்றும், மற்றொன்று தந்தையின்வழி வந்தது என்றும் முன்னர்க் கண்டோம். இதனால்தான் நிறக் கோல்களின் எண்ணிக்கை இரட்டைப் படை எண்ணாகவே உள்ளது என்பது ஈண்டு அறியத்தக்கது. பெரும் பாலும் இந்த இணைகிறக் கோல்கள் வடிவத்திலும் பருமனிலும் ஒன்றற்கொன்று மாறுபடுகின்றன, ஒவ்வோர் உயிரி யி ன் ஒவ்வோர் உயிரணுவிலும், ஒரே வகை உயிரியின் பலவற்றின் உயிரணுவிலும் இந்த நிறக் கோல்களின் எண்ணிக்கை மாறாதிரும் பதால்தான் இனம் மாறாமல் காக்கப்பெற்று வருகின்றது.

மானிட உயிரணுவில் 23 இணை நிறக்கோல்கள் உள்ளன. படத்தில் (படம்-14) ஆணின் கிறக் கோல்கள் காட்டப்பெற் றுள்ளன. ஒவ்வோர் இணையையும் உற்று நோக்கினால் அவற்றி லுள்ள நிறக்கோல்கள் ஒரே மாதிரியாக இருப்பது தெரியவரும். இறுதியில் ஓர் இணையில் உள்ள நிறக் கோல்கள் மட்டிலும் வேற்றுமையுடையனவாக இருக்கும். அவைதாம் பு தி தா. க த் தோன்றக் கூடிய உயிரி ஆணா ? பெண்ணா ? எனறு அறுதியிடு பவை. இதன் விவாங்களைப் பின்னர் விளக்குவோம். மானிட உயிரியின் ஒவ்வோர் உயிரணுவிலும் 23 இணை நிறக் கோல்கள் இருப்பது போலவே, சந்ததி பெருக்குவதற்காக ஒதுக்கபபெற்றுள்ள உயிரணுக்களிலும் 23 இணை நிறக்கோல்கள்தாம் இருக்கும். இந்த அணுக்கள் விந்தணுக்களாகவும் முட்டையணுக்களாகவும்