பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிறக்கோல்களும் ஜீன்களும் 47

பிள்ளைகட்குக் கடத்தப்பெறுபவை. ஒவ்வொரு கிறக்கோலிலும் கிட்டத்தட்ட 3000 ஜீன்கள் இருப்பதாகக் கால்வழியியல் வல்லு கர்கள் ஆராய்ந்து கண்டுள்ளனர். இந்த ஜீன்களை மிக நுட்பமாக அமைக்கப்பெற்றுள்ள எலக்ட்ரான் நுண் பெருக்கியாலும்” காண்பது அரிது. அவற்றை நன்கு உற்று நோக்கி அவற்றினிடையேயுள்ள புறத் தோற்ற வேற்றுமைகளைக காண முடியாது போயினும், ஒரு வித பழ ஈக்களை ஆராய்ந்து ஒவ்வொரு ஜீனும் ஒரு திட்டமான பண்புக்கும் செயலுக்கும் காரணமாகின்றது என்பதை நிலை நாட்டி யுள்ளனர் உயிரியல் அறிஞர்கள்.

மரபுவழிப் பண்புகள் : மரபுவழிப் பண்புகள் அமைவதற்கு இந்த நிறக்கோல்கள் எவ்வாறு காரணமாகின்றன என்பதை விளக்குவோம். ஒரு மானிடமுட்டை கருவுறுவதில் முட்டையும் விந்தணுவும் பங்குபெறுகின்றன என்றும். இவ்வாறு கருவுற்ற முட்டையின் உயிரணுவில் 46 கிறககோல்கள் அமைகின்றன என்றும், இவற்றுள் பாதி ததை வழியாகவும் (விந்தணு மூலம்) பாதி தாய் வழியாகவும (முட்டையணு மூலம்) வந்தவை என்றும் முன்னர் விளக்கினோம் (படம்-6ஐக் கவனிக்க). ஆகவே, ஒரு குழந்தை தன்னுடைய இரண்டு பெற்றோரிடமிருந்தும் புதியவகைச் சேர்க்கை ஜீன்களைப் பெறுகின்றது. இந்த ஜீன்களை அது தமது பெற்றோர்களிடமிருந்தும், அவர்கள் தங்களது ஜீன்களைத் தமது பெற்றோர்களிடமிருந்தும் பெற்றவையாகும். எனவே, ஜீன்கள் வழிவழியாகப் புதியபுதிய சேர்க்கையாகச் சந்ததியினருக்கு இறங்கிக் கொண்டுள்ளன என்பது தெளிவாகும் ஆகவே, ஒரு குழந்தை தன்னுடைய ஒவ்வொரு பெற்றோரிடமிருந்து பெறும் ஒவ்வொரு 23 கிறக்கோல்களும் தனனுடைய இருவழிப் பாட்டன் பாடடிமாரிட மிருந்து பெற்றவையாகும். இதனைப் படம் (படம்-16) விளக்கு கின்றது. பெற்றோர் தம் குழந்தையிடம் கடத்தும் கிறக்கோல்கள் அவர்கள் தம் பெற்றோர்கள் மூலம் பெற்றவையாகும் என்பதைப் படத்தை உற்று நோக்கித் தெளிவுபெறுக. குழந்தை-1 உம்

8. 5T6υάι’ Jr6r y6r Gu(5άά - Electron microscope.

4. Lisp 5 - Fruit fly. (Drosophila) 5. இயல்-3.