பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல் 9

அதிசயப் பிறப்பு

ஏன் பிறந்தோம் இந்த வினா மெய்ப்பொருளியலைச் சார்ந்தது. இதை இங்கு விளக்க வேண்டிய அவசியம் இல்லை. எப்படிப் பிறந்தோம் ? இஃது அறிவியல் எல்லைக்குட்பட்டது. நம் முடைய வாழ்வில் செய்த அருஞ்செயல்களுள் பெரும்பாலானவை நாம் பிறப்பதற்கு முன்பே செய்யபபெற்று விட்டன : நாம் பிறந்ததே ஓர் அதிசயம்! எப்படி என்பதை விளக்குவோம்.

கருவுற்ற முட்டையினின்றே தோன்றினோம் என்பதை நாம் நன்கு அறிவோம். சகர புத்திரர்கள் அறுபதினாயிரம் பேர்கள் என்று புராணம் கூறும். நம்முடைய இறந்த இருக்கும் பெற்றோர் களோ கோடிக்கணக்கானவர்கள். இவர்களுள் ஒரு குறிப்பிட்ட இருவர் கலந்ததனால் நாம் தோன்றினோம். எத்தனையோ தற் செயல்களில் ஒன்றின் விளைவாக நாம் நம் பெற்றோருக்குப் பிள்ளையானோம். குழந்தைகள் பிறக்கும் எண்ணிக்கைக்கு மட்டி லும் ஒரு வரையறை மட்டிலும் இல்லாதிருக்குமாயின் வெவ்வேறு விதமான எத்தனைச் சகோதரர்கள் நம்முடன் பிறந்திருத்தல் கூடும் ? இதற்கு விடை காண்பது முடியாததன்று.

தந்தை தாயினிடமுள்ள உயிரணுக்கள் குறைத்துப் பகுத்தல் முறை யில் பிரிகினறன என்று கூறினோமல்லவா ? இவ்வாறு பிரிவதில் யாதொரு முறையும் இருப்பதாக இதுகாறும் அறிவியல் கண்டறிய வில்லை. பிரிதலைத் ‘தற் செயலே’ அறுதியிடுகின்றது.