பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணிந்துரை

மாண்புமிகு கல்வி அமைச்சர் திரு. செ. அரங்கநாயகம்

‘தமிழில் முடியுமா ?-தமிழில் அறிவியலைப் பயிற்று விக்க முடியுமா ? என்ற வினா சுமார் ஐம்பதாண்டுகட்கு முன்னர் எழுப்பப்பட்ட வினா. முடியும்’ என்று இதே தலைப்பில் இயற்பியல் நூலொன்று அழகான தமிழில் எழுதி மெய்ப்பித்தார் மூதறிஞர் இராஜாஜி. இப்பொழுது இத்தகைய வினாவை எழுப்புவதற்கு இடம் இல்லை. அறிவியலைத் தமிழில் கற்பிக்க, கலைச் சொல்லாக்கம் என்பது தடைக் கல்லாக இருக்காது என்பதற்குக் கடந்த ஐம்பதாண்டுக் கால மாக உயர்நிலைப் பள்ளிகளில் அறிவியல் பாடங்கள் தமிழில் கற்பிக்கப்பட்டு வருவதே ஒரு சான்றாகும். கல்லூரிகளிலும் பல ஆண்டுகளாகத் தமிழிலேயே அறிவியல் பாடங்கள் கற் பிக்கப்பட்டு வருகின்றன. பெற்றோர்களும் பயிலும் மாணாக் கர்களும் உரிய அளவுக்கு ஒத்துழைக்காமலிருப்பதால் இம் முறையில் சிறிது தேக்கம் காணப்படுகின்றது. பல நல்ல பாட நூல்கள் தமிழில் இப்போது வெளிவந்துள்ளன. கற்பிக்கும் ஆசிரியர்களும் பேருக்கம் காட்டி வருகின்றனர். ‘சொல்லும் திறமை தமிழ்மொழிக்கில்லை’ என்ற வாக்கு பழங்கதை யாய் மறைந்துவிட்டது.

எனினும், ஆர்வமூட்டும் அறிவியல் கலை நூல்கள் தமிழில் தொடர்ந்து அதிகம் தோன்றவில்லை. எல்லா கிலைகளிலும் பல்லாயிரக்கணக்கான அளவில் கற்பிக்கும் ஆசிரியர்களிருந்தும், இத்தகைய நூல்களை எழுதி வெளி