பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதிசயப் பிறப்பு 57

முட்டையணுவும் ஒன்று சேர்தல் வேண்டும். மேற் குறிப்பிட்ட வற்றைக் கொண்டு நாம் பிறப்பதற்கு என்ன நிகழ வேண்டும் என் பதை எண்ணிப் பார்ப்போமாக. சரியான தருணத்தில் 16,777,216 விந்தணுக்களில் ஒன்று ஒரு திடடப்படுத்தப்பெற்ற முட்டையைச் சேர்ந்திருக்க வேண்டும். இந்த விந்தணுவில் பாதியும் முட்டையணு வில் பாதியுமாகச் சேர்ந்தே நாமாகப் பிறந்திருக்கின்றோம். இது 16,777,21.6 x 16 777,216 தடவைகளில் அதாவது கிட்டத்தட்ட 300,000,000,000,000 தடவைகளில் ஒன்றாகத்தான் நிகழ்தல் கூடும் இவற்றுடன் வேறு கூறுகளும் சேர்ந்தால் சொல்ல வேண்டியதில்லை : இன்னும் இந்த வாய்ப்பு அரிதாகின்றது. எனவே, நம்மை உருக்கி வார்த்தாலொத்த மற்றொருவரை இந்த உலகில் காண்பதென்பது குதிரைக் கொம்பாகும்.

முட்டையணுவும் விந்தணுக்களும் முதிருங்கால் தந்தைவழியாக வந்துள்ள கிறக்கோல்களும் தாயின்வழியாக வந்துளள நிறக்கோல் களும் இணையாகச் சேர்ந்திருப்பவை தனித்தனியாகப் பிரிகின்றன என்று மேலே குறிப்பிட்டோம் அல்லவா ? முதற் பிரிவில் ஏற்படும் இரண்டு அணுக்களிலும் முதிராத உயிரணுவில் உள்ளதில் பாதி பாதி கிறக் கோல்களே உள்ளன. அவ்வாறு அவை பிரியுமுன் ஒன்றையொன்று தழுவுவதால் அவற்றின் பாகங்கள் மாறியமைக் திருக்கவும் இடம் உண்டு. தந்தையிடமிருந்த நிறக் கோலில் ஒரு பகுதி தாயிடமிருந்த நிறக் கோலோடு சேர்ந்து பழைய உருவத்தையே பெற்றுவிடுகின்றது. இதனைப் படம் (படம்-18) விளக்குகின்றது. AB, a0 என்ற இரண்டு ஒத்த நிறக்கோல்களும் ஒன்றோடொன்று பின்னிக் கொண்டு தழுவிப் பிரிகின்றன. இவ்வாறு பிரியுங்கால் கிறக் கோல்கள் அறுபடுகின்றன. அறுபட்ட துண்டங்கள் மீண்டும் சேருங்கால் மாறிச சேர்கின்றன. AB, ab இணைக் கோல்கள் Ab aB யாக மாறியமைந்திருபபதைக் காண்க. கிறக்கோல்கள் அறுபட்டு ஒட்டிக்கொள்வதில் எத்தனையோ சிக்கல்கள் உண்டு. அவற்றை இங்கு விளக்கவில்லை.

மேலும் ஒரு கிறக்கோலில் ஆயிரக்கணக்கான ஜீன்கள் உள்ளன. இதிலிருந்து 23 கிறககோல்களிலும் எத்தனை ஜீன்கள் உள்ளன என்று கணக்கிடலாம். இத்தனை ஜீன்களும் மேற்கூறிய