பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதிசயப் பிறபபு 59,

பெருக்கும் கரைபுரண்டோடத் தொடங்கிவிடுகின்றது. இத்தகைய ஓர் எல்லையற்ற தடவைகட்கொருமுறை நிகழும் தற்செயலால் தான் நம்முடைய குழவி ஒரு கூர்ததமதியுடன. பிறப்பதும் மந்த மதியுடன் பிறபபதும், அழகனாகப் பிறபபதும், எட்டேகால்’ இலட்சணமாகப் பிறப்பதும் அறுதியிடப்பெறுகின்றன.

முட்டை கருவுறும்போதே மரபுவழிப் பண்புகள் அனைத்தும் அமைந்துவிடுகின்றன. அதிலிருந்து தோன்றும் குழந்தை பத்தாண்டுகள் வாழ்வதும் நூறாண்டுகள் வாழ்வதும், பொன னிற மேனியனாக அமைவதும் மாநிற மேனிற மேனியனாக அமைவதும், இன்னோரன்ன ஏனைய பண்புகள் அமைவதும் குறிப்பிட்ட நிறக் கோல்களாக இணையும் ஜீன்களால் முட்டை கருவுறும்பொழுதே அறுதியிடப்பெறுகின்றது. இக் கருவுற்ற முட்டையே முன்னர் கூறியதைப்போல் பல்லாயிரக்கணக்கான உயிரணுக்களாகப் பல்கி ஒரு குழந்தையாக அமைகின்றன. உயிரணுககள் இரட்டிப்பது 45 தடவைகள் நிகழ்கின்றன என்றும், ஒரு குழநதையின் உடலில் 26000000000000000000 உயிரணுக்கள் இருப்பதாகவும் கணக்கிட்டுள்ளனர்! ஆயினும், இந்த அணுக்கள் எப்படிப் பல்கி னாலும, தசை, எலும்பு, நரம்பு முதலியவற்றின் அணுக்களாக மாறினாலும், ஒவ்வோர் உயிரணுவிலும் 46 நிறக்கோல்களே அடங்கியுள்ளன என்பதை நினைவில் இருத்தவேண்டும்.

‘ மேற் கூறியவற்றிலிருந்து முட்டையணுவும் விந்தணுவும் சேர்ந்து கருவுறுவதும் அவ்வாறு கருவுற்ற முறையிலிருந்து நாம் தோன்றி யதும் வியப்பினும் வியப்பாக இருக்கின்றதல்லவா? என்னே இந்த அதிசயப் பிறப்பு

8. எட்டேகால் லட்சணம்-அவலட்சணம். எட்டு - அ; கால் - வ. (தமிழ் இலக்கக் குறியீடுகள்),

4. 26 Trillon = 26 x 10*