பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிறப்பதற்குமுன் நேரிடும் பேரிடர்கள் 6 to

கொண்டிருக்கும் பல்வேறு நிலைகளும் கருப்பையில் புதைந்து கொள்ளும் நிலையும் படத்தில் (படம்-20) காட்டப்பெற்றுள்ளது.

படம்-19. கருப்பையில் பதிந்துகொள்ளும் நிலையில் ஒரு கருவுற்ற முட்டையின் வெளித்தோற்றதைக் காட்டுவது (12 நாட்களில்)

எல்லா முட்டையணுக்களுக்கும் இங்ஙனம் பதிந்துகொள்ளும் வாய்பபு கிடைக்கும என்று சொல்வதற்கில்லை. வாய்பபுக் கிட்டாத பொழுது தன்னிடமுள்ள மஞ்சட்கருப் பொருள் முற்றிலும் முடிவுற்றதும் முட்டை இறந்துபடுகின்றது. (அல்லது அது சில சமயம் கருப்பையிலுள்ள தசைநார்க்கட்டியில்’ ஒட்டிக்கொண்டு ஊட்டப்பொருள்களை அடையமுடியாமல் மரிப்பதும் உண்டு. இன்னும் சில சமயங்களில் கருக்குழலில் நகர்ந்துவராமல் அதன் சுவரில் தன்னைப் பதிததுக்கொண்டு வளர்தலும் உண்டு. இது “கருக்குழல் கருப்பம்’ எனப்படும். இங்கு முழுவளர்ச்சி சாத்தியப்

2. sorpr&st_i-- Fibroid tumour. 3. *(jpsb &@tilith - Tubular pregnancy.