பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிறப்பதற்கு முன் நேரிடும் பேரிடர்கள் 63

இதுபற்றிய விவரங்களை இந்நூலாசிரியரின் ‘இல்லற நெறி’ என்ற நூலில் காண்க.” மேலும், சிலசமயம் முட்டை சூற்பையிலிருந்து கருக்குழலுக்குத் தாவும்பொழுதே விந்தணுக்களைச சந்தித்துக் கருவுற்று வயிற்றுக் குழியில்” தங்கிவிடுவதுமுண்டு. இதனையும் அறுவைமுறை மூலம் அகற்றிவிடவேண்டும்.

முட்டை கருப்பையில் ஒட்டிக்கொள்ள முயலும் போது கருப்பைசசுவர் அதனை எதிர்க்கின்றது. எதிர்ப்பை வென்று முட்டை சுவரில் பதிந்துகொண்டவுடன் முட்டையின் மேற்புறத்தி லிருந்து பல சிப்புகள்” வளர்ந்து கடிப்பைச் சுவரைக் குடைந்து அதிலுள்ள மெல்லிய குருதிக் குழல்களை அரித்துக் குருதியுடன் தொடர்பு கொள்ளுகின்றன. இதன்பிறகு கருவுற்ற முட்டை தாயின் குருதியிலிருந்து ஊட்டப் பொருள்களைப பெற்று வளர்கின்றது. இந்த வளர்ச்சியில் பல நிலைகள் உள்ளன. அவற்றை ஈண்டு விளக்கப்போவதில்லை.

இனி, எந்த அளவு குழந்தையின் வளர்ச்சியிலும் துலக்கத்தி

லும் அதன் எதிர்காலத்திலும் தாய் அதனைப் பாதிக்கக் கூடும் என்பதை விளக்குவோம். கருவுற்ற முட்டை கருப்பைச் சுவரில் பதிந்து சிம்புகளின வளர்ச்சி தொடங்கும்பொழுது நஞ்சு’ என்ற பகுதி தாயின் சவ்வில் வளர்கின்றது. இது தாயின் உடலின் ஒரு பகுதியன்று என்பதை நினைவில் இருத்த வேண்டும். சிம்புப் பகுதிகள் வளர்ந்து கிளைகளை விட்டு ஒன்றோடொன்று இணைந்து முறுக்கிக்கொள்ளும்பொழுது அவை ஓரங்குல கனமும் 8-10 அங்குலக் குறுக்களவுள்ள வட்டப் பகுதி யாக வளர்ந்து பஞ்சுபோல் மிருதுவாக உள்ளது. இப் பகுதியையும் இளஞ்சூலையும் இணைக்

5. சுப்பு ரெட்டியார், ந : இல்லற நெறி, தமிழ்ப் புத்தகாலயம் சென்னை.5.

6. 6)ju$ jgJ @yfi - Abdominial cavity.

7. சிம்புகள் - Vill.

8. 6,16msf - Growth.

9. gilsvub - Development.

10. Br - Placenta.