பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிறப்பதற்கு முன் நேரிடும் பேரிடர்கள் 65

களும் கொப்பூழ்க் கொடியின் குருதிக் குழல்கள் வழியாக கஞ்சி லுள்ள தாயின் குருதியுடன் கலந்து தாயின் கழிவுப் பொருள்களுடன் வெளியேறுகின்றன. இச் செயல்கள் சவ்வூடு பரவுதல் “ என்ற முறையில் நிகழ்கின்றன. எனவே, தாய்க்கும் சேய்க்கும் யாதொரு நேர்முறைக் குருதித் தொடர்பு இல்லை என்பது அறியத்தக்கது. படததை (படம-21) உற்று நோக்கித் தெளிவு பெறுக அங்ஙனமே, தாய்க்கும் சேய்க்கும் யாதொரு நரம்பு இணைப்பும் இல்லை. ஆகவே, தாய்க்கும் சேய்க்கும் நேர்முறை மனத்தொடர்பும்’ இல்லை என்பது தெளிவாகின்றது. இதனால் தாயின் மனத்தைப் பாதிப் பவைகள் குழந்தையைப் பாதிக்கா என்பது தெரிகின்றது. எ - டு : கருப்பமுற்றுள்ள தாய் அடிக்கடி இசைக் கச்சேரிக்குச் சென்று இசைவிருநதினைப் பெற்றால், அஃது அவள் வயிற்றில் வளரும் குழந்தைக்கும் இசைப்புலமை ஏற்படும் என்று சொல்வதற்கில்லை.

கருவில் வளரும் குழந்தையின் வளர்ச்சியில் முளை நிலை அல்லது முட்டைநிலையில் ‘ குழந்தைககு ஏற்படும் இடர்ப்பாடுகளை மேலே கண்டோம். இளஞ்சூல் நிலையில் கருச்சிதைவு, குழந்தையிடம் பொருத்தமில்லாத அமைப்பு என்ற இரண்டு இடர்கள் தோன்றலாம். முதுசூல் நிலையிலும் கருச்சிதைவு, குறைமாதப் பிரசவம் என்ற இரண்டு இடர்கள நேரிடலாம். இவற்றிற்குரிய காரணங்கள் மரபு வழியாக வரும் கருவுற்ற முட்டையின் இடமாகவும் அல்லது இளஞ்சூல் முதுசூல்கள் வளரும் தாயின் இடமாகவும் அமைகின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுள்ளனர். அவற்றையும் ஈண்டு விளக்கப்போவதில்லை.

13. சவ்வூடு பரவுதல் - Osmosis. 14. InsurgGTLstly - Mental or psychological relationship.

15. பிறப்பதற்குமுன் முழந்தையின் வளர்ச்சியை முளைநிலை அல்லது முதற்சூல்நிலை eோாமal period), பிண்டநிலை அல்லது இளஞ் $oso (Fre bro onic period), gp5osot (Foetal period) &rsorp, மூன்று நிலைகளாகப் பிரித்துப் பேசுவர் உடலியல் அறிஞர்கள். முதல்நிலை கருவுற்ற நாளிலிருந்து இரண்டு வாரம் வரையிலும், இரண்டாம் நிலை இரண்டாம் வார இறுதியிலிருந்து இரண்டாந் திங்கள் இறுதிவரையிலும், மூன்றாம் நிலை இரண்டாந்திங்கள் இறுதியிலிருந்து குழந்தை பிறக்கும் வரையிலும் நீடிக்கும்.

வா.-5