பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 வாழையடி வாழை

இங்ஙனம் பிறக்கப் போகும் குழந்தை தாயின் கருப்பத்தில் பல் வேறு இடர்களை அடைகினறது. இவற்றுககெல்லாம் தப்பியே நாம் பிறந்திருக்கினறோம்; பிறந்துள்ள யாவரும் இததகைய இடர்களைத் தாண்டியே பிறந்திருக்கின்றனர். இயற்கையனனையே இங்ஙனம் மானிடப் பயிர்களைத் தேர்நதெடுகின்றாள். கருவுற்ற முட்டை யணுககளில் ஒரு சிலவே குழந்தைகளாகின்றன எனறும், எண்ணற்ற முட்டைகள் கருவுற்றும கருவுற்றமை பெண்ணுககுத் தெரியாமலேயேயும் அழிகதுவிடுகின்றன என்றும் வல்லுநர்கள் கருதுகின்றனர். இந்த இயற்கையன்னையின் சோதனையில் அவபபேற்றின் காரணமாகப் பல நல்ல அறிஞர்களாக வளரவேண்டிய குழந்தைகளும் மரிததுப்போதல்கூடும். எனினும், பெருமபாலான பெற்றோர்கள் இச சோதனையை மேற்கொள ளும் இயற்கை யனனைககு மிகவும் கடப்பாடுடையவர்களாக இருததல் வேணடும். இச சோதனை யில்லையாயின் எத்தனையோ குறைபாடுகளுடன் மனிதர்கள் பிறக்க நேரிடும். பிறநதவர்கள் யாவரும வாழவே பிறந்துளளார்கள் என்று கருதுவதுதான் அறிவுடைமை. பிறந்த குழந்தைகள் வாழ்க்கையில் வெறறியடைவது அவர்களது பெற்றோர் களையும, அவர்கள் இயல்பாகப் பெற்றுளள மரபுவழிக் கூறு களையும், சமூகம் அவர்கள் வளர்வதற்கு அமைத்திருக்கும் சூழ் நிலையையும்” பொறுததுளளது.

16. gsfil6060 - Envirc f me 1