பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

wi

பிடப் பலர் முன்வருவதில்லை. பேராசிரியர் ஆர். கே. விசுவ நாதன், பேராசிரியை ஈ த. இராஜேசுவரி அம்மையார், திரு. பெ. நா. அப்புசாமி போன்ற சிலர்தாம் இத் துறையில் சீரிய பணியாற்றியுள்ளனர். இவர்களை அடுத்துப் பேராசிரியர் டாக்டர் ந. சுப்பு ரெட்டியார் அறிவியலில்-பல துறைகளில்சிறுவர்களுக்காகவும் வளர்ந்தவர்களுக்காகவும் பொதுமக்களுக் காகவும் இதுவரையில் பதினான்கு நூல்களை எழுதித் தமிழ் மொழிக்கு வளமூட்டியுள்ளார். அறிஞர் பெட்ரண்ட் ரஸ்ஸல் எழுதியுள்ள ‘அணுவின் அரிச்சுவடி” (A. B. C. of Atoms) சர் ஜேம்ஸ் ஜீன்ஸ் எழுதியுள்ள விளங்கா வியன் உலகம்’ (The Mysterious Universe) என்ற நூல்களைப் போலத் தமிழில் அறிவியற் புனைவு நூல்கள் தோன்ற வேண்டும்.

‘வாழையடி வாழை என்ற இந் நூல் மாந்தரின் கால்வழி இயலைப் (Genetics) பற்றியது. அணுவியல் தொலை உலகச் செலவு’ போன்ற பகுதிகள் அண்மைக் காலத்தில் பல சிறந்த பயன்களை இயற்பியலில் கல்கியுள்ளதைப் போலவே உயிரியலில் கால்வழிப் பகுதி பல வியக்கத்தக்க பயன்களை விளைவித்துள்ளன. 1983 திசம்பர் திங்களில் தில்லி மாநகரில் நடைபெற்ற அனைத்துலகக் கால் வழியியல் மாநாட்டில் கலந்துகொண்ட 50 நாடுகளைச் சார்ந்த 2500 அறிவியல் அறிஞர்கள் இத் துறையில் புதிதாகக் கண்டறிந்த பல அரிய சாதனைகளை விளக்கி உரையாற்றினர்.

இந்த நூல் பேராசிரியர் க. சுப்பு ரெட்டியார் உயிரியலில் ஜீன்களால் (Genes) விளையும் பல புதுமைகளை அறிவியல் கல்வி பயிலாதவர்களும் எளிதில் புரிந்துகொள்ளுமாறு தெளி வாகப் படங்களுடன் விளக்கியிருப்பது பாராட்டத்தக்கது. இந் நூலில் பெற்றோர்களிடமிருந்து தம் சேய்களுக்கு மரபு வழி யாகச் செலுத்தப்பெறும் பண்புகள், கடத்தப்பெறாத பண்புகள்