பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல் 11

ஆனா? பெண்ணா?

“மங்கலம் என்ப மனைமாட்சி; மற்றதன்

நன்கலம் நன்மக்கட் பேறு’

என்றார் வள்ளுவப் பெருந்தகை. இக் குறளில் இல்வாழ்க்கையின் பயனாக நன்மக்கட் பேறு’ என்று பொதுவாக குறிக்கப்பெற் றுள்ளதேயன்றி ஆண்மக்கள், பெண்மக்கள் என்று வேறுபடுத்திக் காட்டப்பெறவில்லை. எனினும், உலகின் எல்லாப் பகுதியிலும் உள்ள மக்கள் ஆண் குழந்தையைப் பெறுவதே சிறப்பு எனக் கருது கின்றனர். பெண்குலமும் ஆண்குழவியையே பெறவிரும்புகின்றது!

இடைக்காலத்தில் பாராளும் மன்னனின் அரண்மனையில் - அந்தப்புரத்தில் - சாதாரணமாக நிகழும் நிகழ்ச்சி இது; பல்வேறு விதத்தில் அணி செய்யப்பெற்றுள்ள அமளியின்கண் அழகிய அரசிளங்குமரி யொருத்தி படுததுக்கொண்டிருக்கிறாள். அவள் சூல்கொண்ட கங்கை, கருவுயிர்க்கும் நிலையிலிருக்கின்றாள். மருத்துவப்பெண்ணொருத்தி அவளை வலப்புறமாகப் படுக்கவைத்துக் கைகளின் பெருவிரல்கள் வெளிநோக்கி இருக்குமாறு அமைக் கின்றாள். சூல்கொண்ட கங்கையின் அருகில் தாடியையுடைய மந்திரவாதி ஒருவன் சாம்பிராணித் தூபக்கோலை மேலும் கீழும் சுற்றிய வண்ணமிருக்கின்றான். அமளியின் கால்மாட்டில் கிறிததுவ மடாதிபதி ஒருவர் ஆண்டவனைத் தொழுத நிலையிலிருக் கின்றார். சோதிடர் ஒருவர் பஞ்சாங்கத்தை வைத்துக்கொண்டு எதை எதையோ முணுமுணுததுக் கொண்டிருக்கின்றார். இரசவாத

1. குறள் - 6.1 .