பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆணா ? பெண்ணா ? 69

கோல்களில் 22 இணைகள் ஒரே மாதிரியாக இருக்கும். பெண் மக்களுள் 23-ஆவது இணையிலுள்ள நிறக்கோல்கள் இரண்டும் ஒரே மாதிரியாக இருக்கும்; அவற்றை XX என்பர். ஆனல், ஆண்மக்களுள் 23 ஆவது இணையில் ஒன்று பெண்மக்களுடைய X நிறக்கோலைப் போலும், மற்றது சிறிதாகவும் இருக்கும். சிறியதை Y கிறக்கோல் என்றும், மற்றதை X நிறக்கோல் என்றும் வழங்குவர். எனவே, ஆணின் உடலிலுள்ள உயிரணுக் களில் 22 இணைகள் -- X Y நிறக்கோல்களும், பெண்ணின் உடலிலுள்ள உயிரணுக்களில் 22 இணைகள் - XX நிறக்கோல் களும் உள்ளன என்பது தெளிவாகின்றது. XX, XY நிறக் கோல்கள் பல அறுதியிடும் நிறக்கோல்கள்” என்றும், மற்றைய 44 கிறக்கோல்கள் ஆட்டோ சோம்கள்’ என்றும் வேறுபடுததி வழங்கப்பெறும்.

கரு வளரும்போது நான்காவது வாரத்தில் ஒதுக்கப்பெற்றுப் பெண்ணின் சூற்பைகளிலும் ஆணின் விரைகளிலும் தங்கும் உயிரணுக்கள் குமரப் பருவத்தில் முறையே முட்டையணுக் களாகவும் விந்தணுக்களாகவும் முதிாச்சி யடையும்பொழுது “குறைத்துப் பகுத்தல்’ என்ற ஒரு முறையில் பிரிவுபடும். இவ்வாறு பிரிவுபடும்போது பெண்ணின் முட்டையில் ஒவ்வொன்றும் 22 + X நிறக்கோல்களைக் கொண்டிருக்கும். 23-ஆவது இணையிலுள்ள கிறக்கோல்கள் இரண்டாகப் பிரிவுற்று ஒவ்வொரு முட்டையிலும் 22 + X நிறக்கோல்கள் வீதம் அமைவதே இதற்குக் காரணமாகும். இதல்ை பெண்ணிடம் உண்டாகும் முட்டைகள் யாவும் ஒரு வகையைச் சார்ந்தனவே என்பது புலனாகும். ஆனால், ஆணின் உயிரணு முதிர்ச்சியடைத்து பிரியும்பொழுது X நிறக்கோல் ஒரு விந்தணுவிலும் Y கிறக்கோல் பிறிதொன்றிலுமாகச் செல்லும். ஆகவே, ஆணிடம் இருவகையான விந்தணுக்கள் உண்டாகின்றன. ஒருவகையில 22 - X நிறக்கோல்களும், மற்றொரு வகையில் 22 - Y கிறக்கோல்களும் அடங்கியிருக்கும்.

3. பாலை அறுதியிடும் நிறக்கோல்கள் - Sex chromosomes. 4. ஆட்டோசோம்கள் - Autosomes. 5. (3)sop;#35ii'ILIGji - Reduction division