பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 வாழையடி வாழை

முட்டைகள் கருவுறுங்கால் நிகழ்வது என்ன? X நிறக் கோல்கள் அடங்கிய விந்தணு ஒன்று முட்டையில் புகுந்து கருத் தரித்தால் கருவுற்ற முட்டையில் 44 + X - X நிறக்கோல்கள் இருக்கும். இது பெண்மகவாகும். Y நிறக்கோல் அடங்கிய விந்தணு ஒன்று முட்டையில் புகுந்து கருத்தரித்தால் கருவுற்ற முட்டையில் 44 + X -- Y நிறக்கோல்கள் இருக்கும்; இ.து ஆண் மகவாகும். மேற்கூறிய செய்திகள் யாவும் படத்தில் (படம்-22) மூனறு நிலைகளில் காட்டபபெற்றுள்ளன. இதனைச் சிறிது விளக்குவோம்.

முதல் நிலை இடப்புறமுள்ள படத்தில் ஒவ்வொரு பெண்ணின் உயிரணுவிலும் இரண்டு X நிறக்கோல்கள் அமைந்திருப்பதும், வலப்புறமுள்ள படத்தில் ஒவ்வொரு ஆணின் உயிரணுவிலும் ஒரு X நிறக்கோலும், அதைவிடச் சற்றுச் சிறிய Y நிறக்கோலும் அமைத்திருப்பதும் காட்டப்பெற்றுள்ளன. பெண்ணின் உயிரணுக்கள் முட்டையணுக்களாகவும் ஆணின் உயிரணுககள் விந்தணுக் களாகவும் மாறுங்கால் ஒவ்வோர் இணையிலுமுள்ள நிறக்கோல்கள் இரு பாதியாகப் பிரிவுற்று ஒரு பாதியே முட்டையணுவிலும் விந்தணுவிலும் அமைகின்றன.

இரண்டாம் நிலை : ஒவ்வொரு முட்டையணுவிலும் 23 --X நிறக்கோல்களே உள்ளன என்பதை இடப்புறப் படமும், ஒருவகை விந்தணுவில் 22 + X நிறக்கோல்களும், மற்றொரு வகை விந்தணுவில் 22 - Y கிறக்கோல்களுமே உள்ளன என்பதை வலப் புறப் படங்களும் விளக்குகின்றன.

மூன்றாம் நிலை : 22 + X வகை விந்தணு முட்டையணு வுடன் சேர்ந்து கருவுறுங்கால் பெண்குழவியும், 22 + Y வகை விந்தணு முட்டையணுவுடன் சேர்ந்து கருவுறுங்கால் ஆண்குழவியும் பிறக்கின்றன என்பதை இது விளக்குகின்றது.

எனவே, மேற் கூறியவற்றால், ஆணின் விந்தணுக்களே பிறக்கும் குழவியின் பாலை அறுதியிடுகின்றன என்பது தெரி கின்றது. ஆண் குழந்தை பிறப்பதற்கும் பெண் குழந்தை பிறப்பதற்கும் காரணமாக இருப்பவ ைஆணே; பெண்ணைக் குறைகூறி மற்றொருத்தியை