பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆனா? பெண்ணா? 73

பாலை அறுதியிடும் பண்புகள் X நிறக்கோல்களில் உள்ளன என்பது அறியக்கிடக்கின்றது. இரண்டு X நிறக்கோல்கள் உள்ள கருவுற்ற முட்டை பெண்ணாகின்றது என்பதையும், ஒரு X நிறக்கோலுள்ள கருவுற்றமுட்டை ஆணாகின்றது என்பதையும் நாம் அறிவோம். ஆகவே, X கிறக்கோல்களில் உண்டாகும் ஹார்மோன்களின் ஏற்றத் தாழ்வே இப்பாலை அறுதியிடுவதற்குக் காரணமாகும் என்பது புலனாகும். X நிறக்கோலிலுள்ள ஜீன்கள் Y கிறக்கோலில் இல்லாமை காரணமாகப் பால்பற்றிய சில ஹார்மோன்கள் அதில் உண்டாவதில்லை. ஆகையால் X நிறக்கோல்களின் ஜீன்கள் விளைவிக்கும் ஹார்மோன்கள் அதிகமாக இருககும் இடத்தில் பெண்ணும், அவை குறைந்துள்ள இடத்தில் ஆணும் உண்டா கின்றன. கிறக்கோலுககு இப்பாலை அறுதியிடுவதில் யாதொரு பங்கும் இல்லை என்றே சொல்லவேண்டும். சில சமயம் பாலை அறுதியிடும் ஜீன்களிடையே புள்ள போராட்டத்தில் ஒரு சமனிலை ஏற்பட்டு இப்படியும் அப்படியுமில்லாத அலிப்பிறவி நேரிடுகின்றது. இஃது அரிதாக நடைபெறும் செயலாகும். சில ஆணியல்புகளை புடைய பெண்களும் சில பெண்ணியல்புகளையுடைய ஆண்களும் அரிதாகத் தோன்றுகின்றனர். இவை யாவும் இயற்கையன்னை புரியும் திருவிளையாடல்களாகும். இதுபற்றிய சில செய்திகளைப் பின்னர் விளக்குவோம்.

X நிறக்கோல்கள் பெறுவதால் பெண்ணும் அவற்றினிடையே உண்டாவதும் இதனை வலியுறுத்துகின்றன.