பக்கம்:வாழ்க்கைச் சுழல்.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21 எண்ணிக்கொண்டிருந்தார்கள். ராஜம் மட்டும் என்ன கண்டாள்? பிறந்தது முதல் அன்பு என்ருல் இன்னதென்றே அறியாமல் வளர்ந்த அவளுக்கு மாமன்மார்கள், பாட்டி ஆகியோரின் பரிவை யும் அன்பையும் கண்டதும் அளவற்ற சந்தோஷம் ஏற்பட்டது. லட்சுமி சிடுகிடு என்று நடந்துகொண்டது.கட்ட அவள் உள்ளத் கில் தைக்கவில்லை. அப்பாவியான அவள் லட்சுமியின் போக்கைக் கண்டு அது அவள் சுபாவம் போலும் என்று எண்ணிக்கொண்டாளேதவிர தன்னிடம் அவளுக்குத் துவேஷம் என்பதை உணரவில்லை. சுலோசைைவப் பற்றியோ, அவளுக்கும் ரமணிக்கும் உள்ள நட்பைப் பற்றியோ, அதற்கும் லட்சுமியின் போக்குக்கும் செருங்கிய தொடர்பு உண்டு என்பதைப்பற்றியோ உணர்ந்துகொள்ளும் ச்ந்தர்ப்பம் அவளுக்கு ஏற்பட்டதே இல்லை. அப்படிப்பட்டவளுக்கு ரமணியின் மனகில்ே மட்டும் எப்படித் தெரி யும்? அவன் சென்னையிலிருந்து வந்ததும் பார்த்தாள். முதல் முத லாக அப்போதுதான் அவள் அவனேப் பார்த்தாள். அவன் அழகு அவள் உள்ளத்தைக் கொள்ளே கொண்டது. இப்படிப்பட்ட கணவன் நமக்குக் கிடைத்தது பூர்வ ஜன்ம பாக்கியம் என்று எண்ணிக்கொண்டாள். அந்த அளவிலே கிருப்தி கொண்ட அவள் மற்றபடி நடைபெறும் விவாதங்களையோ, இதர விவகா ாங்களேயே உணரவே இல்லை. எல்லோரையும் போல்வே அவளும், அவருக்கு ஏதோ கோபம் என்றுதான் எண்ணிக் கொண்டிருந்தாள். அவன் முகத்திலே சிரிப்பைப் பார்க்க அவள். மனம் துடியாய்த் துடித்தது. அந்தப் பாக்கியம் அவளுக்குக் கிட்டவேயில்லே. - மாலையில் கலங்குக்கு ஏற்பாடு ஆகியிருந்தது. பந்தலில் ஆண், களும் பெண்களுமாகப் பலர் கூடியிருந்தன்ர். மேளகாரன் பூர்விகல்யாணி , ராகத்தை உருவகப்படுத்திக்கொண்டிருந்தான். கூட்டத்தில் கசமுசவென்ற பேச்சு எழுந்தது. சற்று கோத்திற் கெல்லாம் ரமனியைக் காணுேம் என்ற செய்தி வேகமாக எங்கும் பாவிற்று. கல்யாண வீடு, த்ெருவில் உள்ள மற்ற வீடுகள், கோவில், குளக் கரை, ரஸ்தா-இப்படி எல்லா இடங்களிலும் ஆட்கள் சென்று தேடினர். நேரம் சென்றுகொண்டே இருந்தது. ாமணி அகப்படவேயில்லை. கல்யாண வீடு என்னவோப்ோல் ஆயிற்று. ராஜம் பச்சைக் குழந்தைபோல் ஒரு முலையில் படுத்து விசித்துவிசித்து ஆழ ஆரம்பித்தாள். சுந்தரேசனின் தாய் காமாட்சி, ராமசாமியின் தகப்பனரான கிழவர் இருவருக்கும் ஏற்பட்ட துயரத்திற்கு எல்லேயே இல்லை. சுந்தரேசன் ஆயாசக் துடன் நாற்காலியில்ே சாய்ந்து கிட்ந்தார். - அப்போது தந்தி ஒன்று வந்தது.