பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#{}{} வாழ்க்கைச் சுவடுகள் இந்நிலையில் நாடக நடிகர் டி.கே. சண்முகத்திடமிருந்து ஒரு கடிதமும் ஒர் அழைப்பும் வந்தன. முதலாவது நாடகக்கலை மாநாடு ஈரோட்டில் நிகழ இருக்கிறது. அதற்கான அழைப்பு தான் அது அப்போது முக்கியமான ஒரு விஷயம் பற்றிப் பேசிமுடிவு எடுக்க வேண்டும். ஆகவே நான் கட்டாயம் ஈரோடு வரவேண்டும் என்று சண்முகம் எழுதியிருந்தார். சக்திதாசனிடம் சொல்லிவிட்டு நான் ஈரோடு போனேன். நாடகக்கலை மாநாடு வெகு சிறப்பாக நடைபெற்றது. பொருளாதார அறிஞர் ஆர்.கே. சண்முகம் செட்டியார் தலைமை வகித்தார். சி.என். அண்ணாதுரை சிறப்புரை ஆற்றினார். என்.எஸ். கிருஷ்ணன், நாடகங்கள் எழுதிப் பெயர்பெற்றிருந்த பேராசிரியர் சி.ஆர். மயிலேறு முதலியவர்கள் பேசினார்கள். தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நாடகக் கலை வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டு, நாடகம்' என்றொரு மாத இதழ் வெளியிட வேண்டும் என்பதும் ஒரு தீர்மானம், அது விஷயமாகப் பேசத்தான் டி.கே. சண்முகம் என்னை அழைத்திருந்தார். அந்த சந்தர்ப்பத்தில் முறையான பத்திரிகை தொடங்கி நடத்த அரசு அனுமதி அளிக்காது. அதனால் குமரி மலர் மாதிரி மாதம் ஒரு புத்தகம் ஆகக் கொண்டு வரலாம். நிலைமை சீர்பட்டதும் அதையே பத்திரிகையாக மாற்றிக்கொள்ளலாம். டி.கே.எஸ். நாடக சபை தான் அந்த இதழைப் பொறுப்பேற்று நடத்தும். அதன் ஆசிரியப் பொறுப்பை நான் ஏற்றுச் செயல்புரிய வேண்டும் என்று சண்முகம் கேட்டுக் கொண்டார் நான் தயங்கினேன். நண்பர் சண்முகம் உற்சாகமூட்டினார். 'நாடகம்' இதழுக்கு வளமான எதிர்காலம் இருக்கும் என்று நம்பிக்கை அளித்தார். சரி. வருகிறேன் என்று சொல்லி வைத்தேன். ஆரம்ப ஏற்பாடுகளை எல்லாம் செய்துவிட்டு எனக்குக் கடிதம் எழுதுவதாக அவர் உறுதி கூறினார். நாடகக்கலை மாநாட்டிற்குத் திருச்சியிலிருந்து கலாமோகினி வி.ரா.ராஜகோபாலனும் வந்திருந்தார். மகிழ்ச்சியோடு பேசிப் பழகினார். போகிறபோது, திருச்சி வந்துவிட்டு நீங்கள் சென்னை போகலாம் என்றார். நான் அவரோடு திருச்சி சென்றேன். பத்திரிகைகளில் கதை கவிதை எழுதுகிறவர்களில் சிலர் சுலபமாகப் பிரசுர வாய்ப்பும் பெயரும் பெறுவதற்காக, ஏற்கெனவே வேறு யாராவது எழுதிய விஷயங்களைத் திருடித் தங்கள் சொந்தச் சரக்கு போல் பேர்பண்ணுவது அதிகரித்து வந்தது. நான் எழுதிய சில உருவகக் கதைகளைக் கவிதையாக மாற்றிய முயற்சிகள் பத்திரிகைகளில் வந்திருந்தன. இவை பற்றி எல்லாம் பேசியவாறு பயணம் செய்தோம். 'இதை எல்லாம் நீங்கள் கட்டுரையாக எழுதவேண்டும். சூடாக எழுதிக்கொடுங்கள். கலாமோகினியில் 'அம்பலம் என்ற தலைப்பில் அதை