பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 夏醚 வெளியிடலாம் என்று விராரா. சொன்னார். திருச்சியிலிருந்து திருநெல்வேலி போக எண்ணம் கொண்டிருந்தேன். ராஜவல்லிபுரத்தில் ஒரு நாள் தங்கிக் கட்டுரையை எழுதிவிடலாம் என்று தீர்மானித்தேன். அதன்படி ராஜவல்லிபுரம் சேர்ந்தேன். என் அண்ணா திருநெல்வேலி மெடிக்கல் ஸ்டோர் வேலையை விட்டு சிலநாட்களிலேயே அம்மாவும் சகோதரர்களும் ராஜவல்லிபுரத்தில் வசிக்கச் சென்று விட்டார்கள். அங்கிருந்த பத்திரிகைகள் பலவற்றைப் பயன்படுத்தி, கதைகளைத் திருடி எழுதிய எழுத்தாளர்கள் பற்றி விரிவாகச் சான்றுகளுடன், ஒரு கட்டுரை எழுதினேன். திருச்சிக்கு வந்து விராராவைச் சந்தித்துக் கட்டுரையைக் கொடுத்தேன். அவர் படித்துப் பார்த்து மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார். வருகிற இதழிலேயே அதை வெளியிடத் தீர்மானித்தார். அட்டையில் எனது படத்தை வெளியிட விரும்பி, அங்கு வந்திருந்த தஞ்சாவூர் மாருதி என்ற நண்பரைச் சித்திரம் வரையச் செய்தார். நான் மீண்டும் நவசக்தி அலுவலகம் சேர்ந்தேன். விரைவிலேயே கலாமோகினி இதழ் வந்தது. அம்பலம் பகுதியில் மாரீச இலக்கியம்' என்கிற எனது கட்டுரை பிரசுரம் ஆகியிருந்தது. அட்டையில் எனது படமும் உள்ளே இந்த மாத அதிதி என்று என்னைப் பற்றிய கட்டுரையும் வந்திருந்தன. அந்தக் கட்டுரை பரபரப்பு ஏற்படுத்தியது. பத்திரிகை ஆசிரியர்கள் சிலரது மனக்கசப்பையும் பெற்றுத் தந்தது. துறையூரில் இருந்து திருலோகம் எழுதியிருந்தார். நீங்கள் கட்டாயம் துறையூர் வரத்தான் வேண்டும் அ.வெ.ர.கி. ரெட்டியார் சென்னை வருகிறார். அவர் திரும்புகிற போது அவருடன் நீங்களும் வந்துவிடுங்கள் என்று எழுதியிருந்தார். அன்றே டி.கே. சண்முகம் கடிதமும் வந்தது. நாடகம் இதழுக்கான வேலைகள் மும்முரமாக நடைபெறுகின்றன. நாடகங்களுக்குச் சீன்கள்' வரைகிற ஒவியர் மாதவனிடம் அட்டைச் சித்திரம் வரையும்படி சொல்லியிருக்கிறோம். நீங்கள் எப்போது ஈரோடு வருகிறீர்கள் என்று அவர் கேட்டிருந்தார். நான் யோசித்தேன். 'நாடகம் புதிதாக ஆரம்பித்து வளர்க்க வேண்டிய இதழ். அதில் நாடகம் மற்றும் கலைகள் பற்றிய விஷயங்களுக்கே முக்கியத்துவம் இருக்கும். டி.கே. சண்முகம் விருப்பம்போல்தான் பத்திரிகை தயாரிக்க வேண்டியிருக்கும். என் இஷ்டப்படி கதைகள் கட்டுரைகள் எழுதிக் கொண்டிருக்கப் போதுமான வசதியும் வாய்ப்பும் இராது. கிராம ஊழியன் ஏற்கெனவே வந்துகொண்டிருக்கும் இலக்கியப் பத்திரிகை. மாதம் இருமுறை