பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 197 கவிஞர் பாரதிதாசனும் அவ்விதமே உணர்ந்தார். 'வல்லிக்கண்ணனா' என்று ஆச்சரியப்பட்டார். பையன் மாதிரி அல்லவா இருக்கிறே' என்றார். 'உன் போட்டோவைப் பத்திரிகையில் வெளியிடாதே எழுத்தைப் படித்துவிட்டு எப்படியெல்லாமோ எண்ணியிருக்கிறவங்க ஏமாற்றமே அடைவார்கள் என்று சொன்னார். 'இவர் படம் வெளிவந்துவிட்டது. 'ஊழியனிலேயே அச்சிட்டிருக்கிறோம் என்று ரெட்டியார் என் படத்தைக் கவிஞரிடம் காட்டினார். அவர் அதைப் பார்த்துவிட்டு, போகட்டும். இனிமேல் படம் வெளியிட வேண்டாம் என்று கூறினார். பாரதிதாசன் உவமைநயம் பற்றிய கட்டுரைகள் தொகுக்கப்பெற்று, 1945இல் புத்தகமாக வெளிவந்தது. பாரதிதாசன்பற்றி வெளிவந்த முதல் புத்தகம் அதுதான் என்று பாரதிதாசன் ஆய்வாளர் ஒருவர் தமது ஆய்வில் குறிப்பிட்டிருக்கிறார். கிராம ஊழியன் ஆண்டுமலர் நிதானமாகத் தயாராகிக் கொண்டிருந்தது. அதற்குப் புதுமைப்பித்தன் ஒரு கவிதை அனுப்பியிருந்தார். வேளுர் வெ. கந்தசாமிக் கவிராயர் எழுதிய ஓடாதீர் வேகமும் அங்கதச் சுவையும் கொண்ட அருமையான கவிதை. எழுத்தாளன் வாழ்கிறபோது கவனிக்காமல் விட்டுவிட்டு, அவன் இறந்த பிறகு நிதி திரட்டுவது நினைவுச் சின்னம் வைப்பது என்று பெருமைப்படுத்துகிற போக்கைக் கண்டித்துச் சூடு கொடுக்கும் நீண்ட கவிதை அது. - அந்தக் கவிதை அச்சில் வருவதற்கு முன்னரே பரபரப்பூட்டும் கவனிப்பைப் பெற்றுவிட்டது. அதற்குக் காரணம் திருலோக சீதாராம்தான். அதை மனப்பாடம் செய்து, அவர் போகிற இடங்களில் எல்லாம், அவருடைய விசேஷமான குரலில் பாடி ஒலிபரப்பினார். 1944 இறுதியில் கோயம்புத்துரில், தமிழ் எழுத்தாளர்களின் முதலாவது மாநாடு கோலாகலமாக நடந்தது. ஜி.டி. நாயுடு என்கிற விஞ்ஞானிதொழில்அதிபரின் 'கோபால்பாக்' என்ற மாளிகையில் அம்மாநாடு நடைபெற்றது. ஜி.டி. நாயுடு ஒரு விந்தை மனிதர். அவர் பரிசோதனைகள் செய்து புதிய புதிய கண்டுபிடிப்புகள் மூலம் அற்புதமான ஆக்கங்களைப் படைத்தார். பப்பாளியில் மிக அதிகமான காய்கள் காய்க்கச் செய்வது தேய்வுறாத ரேஸர் பிளேட், மற்றும் கார்கள், மோட்டார் சாமான்கள் என்று ஏகப்பட்ட தயாரிப்புகளை உருவாக்கினார். அவை மலிவு விலையில் சந்தைக்கு வந்து மக்களுக்கு உதவுவதற்கு வகை செய்தார். ஆனால் அரசாங்கம்