பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 109 திரும்பக் கேட்டார். அதன் பிறகு தான் புதுமைப்பித்தன் எழுதியது. இன்னும் அச்சில் வரவில்லை என்று திருலோகம் தெரிவித்தார். கிராம ஊழியன் ஆண்டு மலர் உரிய காலத்தில் வெளிவந்தது. அது தரமான இலக்கிய மலராக அமைந்து, இலக்கிய வாதிகளின் பாராட்டுக்களை அதிகம் பெற்றது. மகாகவி பாரதியாரை அடுத்துவந்து புகழ் பெற்றிருந்த கவிஞர்கள் அனைவரது கவிதைகளும் அம் மலரில் இடம் பெற்றிருந்தன; அவை மலருக்காக அவர்கள் புதிதாக எழுதித் தந்தவை. பாரதிதாசன், சது.க. யோகியார், தேசிகவிநாயகம் பிள்ளை, நாமக்கல் வெ. ராமலிங்கம், கவியோகி சுத்தானந்த பாரதியார், கம்பதாசன் ஆகியோரின் படைப்புகள். அடுத்த தலைமுறைக் கவிஞர்களான கலைவாணன், சாலிவாகனன், மந்தஹாசன், தேய பெருமாள், சுரபி கவிதைகள் படைத்திருந்தார்கள். ந. பிச்சமூர்த்தி (பிக்ஷ மகாகவிகள்' என்று ஐந்து பறவைகள்பற்றித் தனித்தன்மையான கவிதை இயற்றியிருந்தார். சிறுகதைகள், கட்டுரைகளிலும் அந்த மலர் சிறப்பான விருந்து ஆக விளங்கியது. அனைத்தினும் மேலாக விசேஷ அம்சமாக, குறிப்பிடப்பட வேண்டிய ஒன்றும் இருந்தது. தமிழ்நாட்டுப் பத்திரிகைகள் அக்காலத்தில் இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களுக்குக் கவனிப்பும் வரவேற்பும் கொடுத்ததில்லை. 'கலைமகள்' அபூர்வமாக சம்பந்தன், சி. வைத்தியலிங்கம் கதைகளை வெளியிட்டது. திறமையை நிரூபித்திருந்த இலங்கை எழுத்தாளர்களுக்கும் இடம் அளிக்க வேண்டும் என்று விரும்பி, அங்குள்ள படைப்பாளிகளுக்குக் கடிதம் எழுதினேன். அவர்களும் மகிழ்ச்சியுடன் ஒத்துழைப்பு தந்தார்கள். இலங்கையின் முன்னோடித் தமிழ்ச் சிறுகதை எழுத்தாளர்களான சம்பந்தன், சி. வைத்தியலிங்கம், இலங்கையர்கோன் நல்ல சிறுகதைகள் அனுப்பி உதவினர். சோ. தியாகராசா, ச. அம்பிகைபாகன் போன்றவர்கள் கட்டுரைகள் தந்தார்கள். இளைய தலைமுறைப் படைப்பாளிகளும் கதை, கவிதை வழங்கியிருந்தனர். அந் நாட்களில் தமிழ்ப் பத்திரிகைகள் சிறப்பு மலர்கள் தயாரிக்கும்போது மகாமகோபாத்தியாய உவே. சாமிநாதய்யர், சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் முதலிய மகா பெரியவர்கள், மந்திரிகள் மற்றும் தலைவர்களுக்கு முதலிடம் தந்து அவர்களுடைய எழுத்துக்களையே முதன்மையாக, வரிசையாக, வெளியிடுவதை ஒரு மரபாகக் கொண்டிருந்தன. கிராம ஊழியன் மலர் அந்த மரபை மீறியது. இலங்கையின் சாதாரண எழுத்தாளரான சோ. தியாகராசனின் கட்டுரையை முதல் கட்டுரையாக வெளியிட்டது. இதனால் எல்லாம் இலங்கை எழுத்தாளர்கள் கிராம ஊழியனையும் என்னையும் வெகுவாக மதித்துப் பாராட்டி மகிழ்ந்தார்கள். இலங்கையர்கோன், கிராம ஊழியனின் இறுதி இதழ் வரை சிறுகதை, நாடகம் என்று தொடர்ந்து