பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

蕊 வாழ்க்கைச் சுவடுகள் எழுதி உதவிக்கொண்டிருந்தார். இளைய படைப்பாளிகளும் உற்சாகமாக ஆதரவு தந்தார்கள். 17 மீண்டும் காலம் எனது வளர்ச்சிக்கு வழி அமைத்தது. திருலோக சீதாராம் கிராம ஊழியனை விட்டு விலகத் தீர்மானித்தார் அவர்தமது வாழ்க்கை முன்னேற்றத்துக்காகச் சில திட்டங்கள் திட்டியிருந்தார் அதைச் செயலாற்றத் துறையூரை விட்டுத் திருக்கிக்கே போவதுதான் நல்லது என அவர் முடிவு செய்தார் - திருச்சியில் 'சிவாஜி' என்றொரு வாரப் பத்திரிகை நடந்து கொண்டிருந்தது. வணிக சமூகத்துடன் தொடர்பு கொண்டிருந்த சிவஞானம் என்பவர் அதன் ஆசிரியராகவும் உரிமையாளராகவும் இருந்தார். சொந்த அச்சுக்கூடமும் வைத்திருந்தார். சிவாஜி ரொம்ப சாதாரண இதழாக வந்துகொண்டிருந்தது. திருலோகம் சிவஞானத்துடன் பேசி, சிவாஜியைக் கவனிப்புக்கு உரியஎல்லோரும் மதிக்கக்கூடிய ஒரு பத்திரிகையாக மாற்றி விடலாம், வளர்ச்சி காரணமாக விளம்பர வருமானமும் கிடைக்கும் என்று யோசனைகள் கூறி அவரை இசைய வைத்தார். அவர் சிவாஜி பத்திரிகை, அச்சகம் இரண்டிலும் கூட்டாளியாகச் சேர்ந்து பொறுப்பேற்றார். சிவாஜி விரைவிலேயே வளர்ச்சிப் பாதையில் முன்னேறியது. முக்கிய எழுத்தாளர்கள் பலரும் அதில் எழுதலானார்கள். சிவாஜிக்கு மேலும் பெருமை சேர்க்கவும் விளம்பர வருமானம் பெறவும் திருலோக சீதாராம் ஆண்டுமலர் வெளியிட்டார். ஆண்டுதோறும் மலர் வெளியிடுவதை ஒரு முக்கியப் பணி ஆக்கினார் அவர். சிவாஜி ஆண்டுமலர்கள் தரமான தயாரிப்புகளாக அமைந்திருந்தன. வழுவழு தாள்கள், பளபள சித்திரங்கள், கவர்ச்சி அம்சங்கள் எதுவும் இல்லாது தரமான-நயமான எழுத்துக்களை படைப்புகளை மிகுதியாகக் கொண்டு கவனிப்புக்கு உரியனவாக அவை திகழ்ந்தன. திருலோகம் கூட்டு சேர்ந்த பின், சில மாதங்களிலேயே சிவஞானம் பத்திரிகை, அச்சகம் ஆகியவற்றின் பொறுப்புகளை அவரிடமே ஒப்பட்ைத்து விட்டு ஒதுங்கிக்கொண்டார். அதனால் திருலோகம் சிவாஜியின் சொந்தக்காரர் ஆனார். அவருடைய ஆர்வம், உழைப்பு ஆற்றல் எல்லாம் சேர்ந்து சிவாஜியை வெற்றிகரமாக முன்நடத்திச் சென்றன. சிவாஜி சீதாராம் என்ற பெருமையும் அவரை வந்தடைந்தது. கிராம ஊழியன் வழக்கம்போல் வெளிவந்தது. அவெர. கிருஷ்ணசாமி ரெட்டியார் நிர்வாக ஆசிரியர், வல்லிக்கண்ணன் ஆசிரியர் என்று