பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 வாழ்க்கைச் சுவடுகள் துறையூரில் கிராம ஊழியன் மாதம்இருமுறைப் பத்திரிகைக்காக உழைத்தபோதே, இதய ஒலி மாத இதழையும் வளர்த்த காலத்திலேயே, நையாண்டி பாரதிக்காக காப்பி என்ற தினசரி கையெழுத்து இதழையும் தயாரித்துக் கொண்டிருந்தேன். முழுநீளத்தாளில் ஃபுல்ஸ்கேப் பேப்பர் நான்கு பக்கங்கள் கொண்ட இதழ் காப்பி நையாண்டி பாரதியின் கிண்டல், குத்தல், சாடல்களே அதில் அதிகம் இடம் பெற்றன. முக்கியச் செய்திகள், அவை பற்றிய கருத்துக்களும் உண்டு பாரதியாரின் புதிய ஆத்தி சூடி மாதிரி நை. பாரதீயம்' என்று தொடர்ந்து எழுதப்பட்டன. நாம் வாழ்க நமக்கு நாமே துணை' என்று தொடங்கி, வாழ்க்கைக்கு வழிகாட்ட வேண்டிய - தற்காலச் சமூக நடைமுறைகளைப் பரிகாசம் செய்யும்- அறிவுரைகள் அடங்கியது நை பாரதீயம். நாம் வாழ்க நமக்கு நாமே துணை என்ற சொற்கள் பலரை வசீகரித்தன. பின்னாளில் 'கல்கண்டு தமிழ்வாணன், வல்லிக்கண்ணன் விளம்பரப்படுத்திய இவ் உரைகளைத் தனது கட்டுரைகளில் குறிப்பிட்டுப் பாராட்டியிருக்கிறார். எழுத்து என்பது எனக்கு விளையாட்டாக, உற்சாகம் ஊட்டுவதாக, ஒரு உந்து சக்தியாக அமைந்திருந்தது. பண வரவு பற்றியோ, வாழ்க்கை வசதிகள் குறித்தோ எண்ணாமல், எப்போதும் வகைவகையாக எழுதுவதில் மகிழ்ச்சியும் மனநிறைவும் கண்டேன். கிராம ஊழியன் ஆசிரியர் என்று பெயர் வந்ததே தவிர, சம்பளம் அதிகமாகக் கிடைத்துவிடவில்லை. சேர்ந்தபோது இருபத்தைந்து ரூபாய் சம்பளம் நிர்ணயிக்கப்பட்டது. சிறிது காலத்துக்குப் பிறகு அது முப்பது ரூபாய் ஆக்கப்பட்டது. ஆசிரியர் என்றானதும் நாற்பது ரூபாய் என்று ஆனது. அதற்கு மேல் உயரவில்லை. நான் அதுபற்றிப் பெரிதாக எண்ணவுமில்லை; கவலைப்படவுமில்லை. இஷ்டம் போல் எழுதுவதற்குச் சுதந்திரம் இருந்தது. என் எழுத்துக்களில் யாரும் குறுக்கிட்டதில்லை. இதை எழுது, அதை எழுதாதே என்று கட்டுப்பாடுகள் விதிக்க யாருமில்லை. அதுவே எனக்குப் போதுமானதாக இருந்தது. ரெட்டியாரும் விளையாட்டு மனப்பண்பு பெற்றிருந்தார். ஊழியன் அச்சகத்தில் பணிபுரிந்த தொழிலாளர்களும் சுதந்திரப் போக்கு கொண்டவர்களாக, நண்பர்களாகவே பழகினார்கள். ரெட்டியார் அவர்களது இயல்புகளை ஆதரித்தார் என்றே சொல்லலாம். - துறையூரில், ஊரை அடுத்து விசாலமான ஓர் ஏரி உண்டு. மழைக்காலத்தில் ஏரியில் நீர் நிறைந்து அழகாக விளங்கும். ஏரி நடுவில் புராதனமான ஒரு கட்டிடம், கீழ்த் தளமும் மாடியும் கொண்டு, வரலாற்றுச்